Advertisment

பெரியார் குத்து... இந்த பாட்டுக்கு சிம்பு ஏன் இந்த பெயரை வைத்தார் தெரியுமா?

author-image
WebDesk
Jan 18, 2019 19:04 IST
simbu periyar kuthu, பெரியார் குத்து

simbu periyar kuthu, பெரியார் குத்து

பெரியார் குத்து என்னும் பாடலுக்காக நடிகர் சிம்பு விருது பெற்றார். விருது விழாவில் ஏன் பாட்டுக்கு இந்த பெயர் வைத்தார் எனவும் கூறினார்.

Advertisment

சமீபக் காலமாகவே சாதி, மதம் வேறுபாடுகளால் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. சாதிக்கு எதிராக குரல் கொடுத்த பல புரட்சியாளர்களில் ஒருவர் தந்தை பெரியார். அவரை போற்றும் வகையில், சிம்பு ஆல்பம் பாடல் ஒன்று பாடியிருந்தார்.

பெரியார் குத்து பாடலுக்கு விருது பெற்றார் சிம்பு

அந்த பாடலின் வெளியீட்டை முன்னிட்டு சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் திராவிடர் திருநாள் கொண்டாடப்பட்டது. இதில் திராவிட கழக தலைவர் வீரமணி தலைமையில் மதன் கார்க்கி, சிம்பு, எஸ். ராமகிருஷ்ணன் போன்றோர் கலந்து கொண்டனர்.

'பெரியார் குத்து' பாடலை பார்க்க கிளிக் செய்யவும்

‘தனக்கு தன்னம்பிக்கை கொடுத்தத என் அப்பா (டி . ராஜேந்தர் ) தான் என்றும்.மனதில் உள்ளதை பேசலாம் ஆனால் உண்மையாக இருக்க வேண்டுமென்ற தைரியத்தை தமக்கு பெரியார் தான் கொடுத்ததாகவும் சிம்பு பேசினார்.

பெண்விடுதலைக்காக பெரியார் நிறைய போராடி இருக்கிறார். இப்பாடலில் பெரியார் பாட்டு என்று போடவில்லை. ஏனென்றால் பெரியார் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் குத்து. அதனால் இந்த பாடலுக்கு குத்து என்று பெயர் வைத்தோம் .’ இவ்வாறு பேசினார்.

#Periyar #Simbu #Str
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment