ஊருக்கே ராஜா ஆனாலும் ஆர்யாவுக்கு இவர் வில்லன் தான்...

சமீபத்தில் வெளியான வந்தா ராஜாவா தான் வருவேன் படத்திற்கு பிறகு நடிகர் ஆர்யா நடிக்கும் ரீமேக் படத்தில் அவருக்கு வில்லனாக நடிக்க இருக்கிறார் நடிகர் சிம்பு.

ஹீரோவாக நடித்து வந்த சிம்பு, காற்றின் மொழி, 90எம் எல் படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். மேலும், ஹன்சிகா நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள மஹா படத்திலும் சிறப்பு தோற்றத்தில் சிம்பு நடிக்கவிருப்பதை அண்மையில் ஹன்சிகா அறிவித்திருந்தார்.

ஆர்யா படத்தில் நடிகர் சிம்பு

இந்நிலையில், நடிகர் ஆர்யா ஹீரோவாக நடிக்கவுள்ள கன்னட ரீமேக் படமான மஃப்டி படத்தில் அவருக்கு வில்லனாக நடிக்க சிம்பு சம்மதம் தெரிவித்துள்ளார். கன்னடத்தில் சிவராஜ்குமார், ஸ்ரீமுரளி ஆகியோர் நடிப்பில் வெளியான மஃப்டி படத்தின் ரீமேக்கில் ஆர்யா நாயகனாக நடிக்கிறார்.

விக்ரம் வேதா ஸ்டைலில் வெளிவந்து, நாயகனுக்கும் வில்லனுக்கும் முக்கியத்துவன் வாய்ந்த கதை இது என்பதால், இதில், வில்லனாக நடிக்க சிம்பு ஓகே சொல்லியுள்ளார். மேலும், நடிகர் சரத்குமார் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

×Close
×Close