Advertisment

நடிகர் சிம்பு மருத்துவமனையில் அனுமதி

Actor Simbu admitted in hospital: காய்ச்சல் காரணமாக நடிகர் சிம்பு தனியார் மருத்துவமனையில் அனுமதி; விரைவில் குணமடைய ரசிகர்கள் வேண்டுதல்

author-image
WebDesk
Dec 11, 2021 21:38 IST
நடிகர் சிம்பு மருத்துவமனையில் அனுமதி

தமிழ் சினிமாவின் முன்னனி நடிகரான சிம்பு காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அவருக்கு பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், நடிகர் சிம்புவுக்கு, கொரோனா தொற்று இல்லை என கண்டறியப்பட்டுள்ளது.

Advertisment

பல தடைகளை நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான ‘மாநாடு’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வருகிறது. அடுத்ததாக, ‘வெந்து தணிந்தது காடு’, ‘பத்துதல’, ‘கொரோனா குமார்’ உள்ளிட்டப் படங்களில் நடித்து வருகிறார். இதில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. நடிகர் சிம்பு இப்படங்களை முடித்தப்பிறகு ராம் இயக்கத்திலும் நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில், இன்று காய்ச்சல் காரணமாக சிம்பு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளது.

சிம்பு காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் பரவி ட்விட்டர் ட்ரெண்டிங்கிலும் இடம்பிடித்துள்ளது. மேலும் சிம்பு விரைவில் குணமடைய வேண்டி ரசிகர்கள் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Simbu #Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment