மதம் மாறிய சிம்புவின் தம்பி குறளரசன்... என்ன சொல்கிறார் டி. ராஜேந்தர்?

நடிகர் சிம்புவின் தம்பியும் டி. ராஜேந்தரின் மகனுமான குறளரசன், குடும்பத்தினர் முன்னிலையில் இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார்.

நடிகரும், இயக்குநருமான டி.ராஜேந்தருக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் இருக்கிறார்கள். இதில் ஒரு மகன் சிம்பு, சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார். இளைய மகன் குறளரசன் இசையமைப்பாளராக இருக்கிறார். திரைப்படத்திலும் நடிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

குறளரசன் மதமாற்றம்

இந்த நிலையில், டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன், இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார். தனது தந்தை டி.ராஜேந்தர், தாய் உஷா ஆகியோரது முன்னிலையில் குறளரசன் இஸ்லாம் மதத்திற்கு மாறினார்.

இதுகுறித்து டி.ராஜேந்தர் கூறும் போது, “எம் மதமும் சம்மதம், ஒன்றே குலம் ஒருவே தேவன் என்ற கொள்கையை கடைப்பிடிப்பவன் நான். சிம்பு சிவ பக்தர், மகள் இலக்கியா கிருஸ்துவ மதத்தை பின்பற்றுகிறார். தற்போது குறளரசன் இஸ்லாமி மதத்தில் சேர்ந்துள்ளார். என் மகனின் விருப்பத்திற்கு மதிப்பு கொடுத்துள்ளேன்” என்றார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

×Close
×Close