தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சிம்பு சமையல் செய்யும்போது, நடிகர் விடிவி கணேஷ், ‘வரப்போற பொண்ணுக்கு வேலையே இல்லாம பண்ணிடுவ போல’ என்று கம்மெண்ட் அடிக்க, சிம்பு சூடாக பதில் அளித்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் சிம்பு. இவர் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற படத்தில் நடித்து வருகிறார். சிம்புவின் தம்பி குரளரசனுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஆனால், சிம்பு இன்னும் திருமணம் செய்துகொள்ள வில்லை. சிம்புவுக்கு எப்போது திருமணம் என்று அவருடைய ரசிகர்களும் சினிமா வட்டாரங்களும் கேட்டு வருகின்றனர். அவருடைய திருமணம் பற்றி சமூக ஊடகங்களில் அவ்வப்போது வதந்திகள் வெளியாகி அது விரைவிலேயே பொய்யான தகவல் என்று தெரியவரும்.
தற்போது கொரோனா அச்சுறுத்தலால் பொது முடக்கம் காரணமாக அனைத்து சினிமா, டிவி சீரியல் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், அனைவரும் வீடுகளில் முடங்கியுள்ளனர். சினிமா நடிகர்கள் பலரும் இந்த பொது முடக்க காலத்தில் சமூக ஊடகங்களில் வீடியோக்களை தங்கள் ரசிர்களுடனான இணைப்பை புதுப்பித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நடிகர் சிம்பு சமையல் செய்ய அருகில் விடிவி கணேஷ் கம்மெண்ட் செய்ய அதற்கு சிம்பு சூடாக பதில் அளிக்கும் வீடியோ சமூக ஊகங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ பொது முடக்கத்திற்கு முன்பு வெளியானதாக தெரிகிறது.
Before lockdown at VTV Ganesh Sirs house. #SilambarasanTR learning to cook. pic.twitter.com/FXId8KPrAk
— Hariharan Gajendran (@hariharannaidu) May 14, 2020
இந்த வீடியோவில், நடிகர் சிம்பு ஸ்டவ்வில் எதையோ வறுத்துக்கொண்டிருக்கிறார். அப்போது அருகில் இருக்கும் நடிகர் விடிவி கணேஷ் தனது கரகரப்பான குரலில், “வரப்போற பொண்ணுக்கு வேலையே இல்லாம பண்ணிடுவிங்க போல இருக்குதே” என்று கூறுகிறார்.
அதற்கு, சிம்பு “அந்த பொண்ணு என்ன எனக்கு வேலை செய்யறதுக்கா கல்யாணம் பண்ணிக்கிறாங்க… கல்யாணம் பண்றவங்கள என்ன வேலைக்காரங்கனு நினைச்சிங்களா… அதெல்லாம் உங்க காலாம்… நாங்கல்லாம் அந்த மாதிரி இல்லை.” என்று கூறுகிறார்.
இடையில், விடிவி கணேஷ் கேமிராவைப் பார்த்து எம்மா கேளுங்கம்மா… தம்பிங்களா… அண்ணன்களா… எல்லாம் ஓட்டு போடுங்க…” என்று சொல்கிறார்.
தொடர்ந்து விடிவி கணேஷிடம் பேசும் சிம்பு, “ஒரு பொண்ணு வாழ்க்கையில துணையாக இருக்கிறதுக்காக வருது… ஒரு துணையை எப்படி ட்ரீட் பண்ணனும்னு தெரிஞ்சுக்கங்க. வேலைக்காரி மாதிரி ட்ரீட் பண்றதுக்கு நான் உங்களமாதிரி ஆள் கிடையாது.” என்கிறார்.
அதற்கு விடிவி கணேஷ், “என்னது பொம்பளைங்க குக் பண்ணக் கூடாதா? இவருதாம் பண்ணுவாராம்பா” என்று சொல்கிறார்.
சிம்பு “நான் குக் பண்ணக் கூடாதுனு சொல்லலப்பா… வேலைக்காரங்க மாதிரி நீங்க ட்ரீட் பண்ணக் கூடாது. அவங்களுக்கு புடிச்சா அவங்க சமைப்பாங்க..” என்று சொல்கிறார்.
சிம்புவின் பேச்சுக்கு கவுண்ட்டர் கொடுக்கும் விதமாக, விடிவி கணேஷ், “இல்லனா… சாப்டு படுத்துக்குவாங்க..” என்று சொல்கிறார்.
சிம்பு மீண்டும் “அவங்க ஏதோ பண்ணிட்டு போறாங்க… உங்களுக்கு என்ன? எம்போண்டாட்டிங்க.. நான் அவள் சந்தோஷமா இருக்கணும்னுதான் நான் நினைப்பேன். உங்கள மாதிரி நான் கஷ்டப் படுத்த நினைக்க மாட்டேன்.” என்கிறார்.
விடிவி கணேஷ் “வெரி நைஸ்… வெரி நைஸ்…” என்று சொல்ல, சிம்பு “புரியுதா” என்று கேட்டு முடிக்கிறார்.
நடிகர் விடிவி கணேஷ் சிம்புவுடன் இணைந்து இயக்குனர் கௌதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில், விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் நடித்திருந்தார். தற்போது, சிம்பு சமையல் செய்யும் இந்த வீடியோ சமூக ஊடகங்களில் இணையத்திலும் வைரலாகி வருகிறது.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook
Web Title:Actor simbu cooking vtv ganesh comment viral video