scorecardresearch

நிஜமாகவே அண்டாவுடன் தயாரான சிம்பு ரசிகர்கள்… நீங்களே பாருங்கள்

நடிகர் சிம்பு கட்டளைக்கு இணங்க, அவரது ரசிகர்கள் பலரும் வந்தா ராஜாவா தான் வருவேன் படத்தின் ரிலீஸில் பால் அபிஷேகம் செய்ய அண்டாவுடன் காத்திருக்கின்றனர். சுந்தர் சி இயக்கத்தில், சிம்பு, மேகா ஆகாஷ், கேத்தரின் தெரசா, ரம்யா கிருஷ்ணன், நாசர், பிரபு, யோகி பாபு, மகத், ரோபோ சங்கர் மற்றும் விடிவி கணேஷ் என பலரும் நடித்திருக்கும் படம் தான் வந்தா ராஜாவா தான் வருவேன். இப்படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்திருக்கிறார். நடிகர் சிம்பு ரசிகர்கள் […]

vantha rajava than varuva simbu, நடிகர் சிம்பு
vantha rajava than varuva simbu, நடிகர் சிம்பு
நடிகர் சிம்பு கட்டளைக்கு இணங்க, அவரது ரசிகர்கள் பலரும் வந்தா ராஜாவா தான் வருவேன் படத்தின் ரிலீஸில் பால் அபிஷேகம் செய்ய அண்டாவுடன் காத்திருக்கின்றனர்.

சுந்தர் சி இயக்கத்தில், சிம்பு, மேகா ஆகாஷ், கேத்தரின் தெரசா, ரம்யா கிருஷ்ணன், நாசர், பிரபு, யோகி பாபு, மகத், ரோபோ சங்கர் மற்றும் விடிவி கணேஷ் என பலரும் நடித்திருக்கும் படம் தான் வந்தா ராஜாவா தான் வருவேன். இப்படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்திருக்கிறார்.

நடிகர் சிம்பு ரசிகர்கள் அண்டாவுடன் காத்திருப்பு

இந்த படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சில காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டது. பிறகு இப்படம் பிப்ரவரி 1ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிப்பு வெளியானது.

இந்த அறிவிப்பை தொடர்ந்து,  கடந்த வாரம் சிம்பு ஒரு வீடியோ வெளியிட்டார். அந்த வீடியோவில், “எனது ரசிகர்கள் யாரும் கட் அவுட், பேனர், பாலபிஷேகம் என செலவு செய்ய வேண்டாம். அந்த பணத்தில் பெற்ரோருக்கு துணி வாங்கிக் கொடுங்கள், தங்கைக்கு சாக்லெட் வாங்கிக் கொடுங்கள்” என்று பேசியிருந்தார்.

இதன் பின்னர், இந்த வார தொடக்கத்தில் முன்னதாக வெளியிட்ட வீடியோவிற்கு எதிர்மாறாக மற்றொரு வீடியோவை வெளியிட்டார். அதில், “எனக்கு இரண்டு மூன்று ரசிகர்கள் தான் இருக்கிறார்கள் நீ ஏன் இதையெல்லாம் பேசுகிறாய் என்று சிலர் கேட்டார்கள். அதனால் அந்த இரண்டு மூன்று ரசிகர்களுக்கு நான் அன்பு கட்டளையாக சொல்கிறேன். இதுவரை எவ்வளவு கட் அவுட் வைத்தீர்களோ அதை விட மிகப்பெரிய கட் அவுட்களை வையுங்கள். பாலபிஷேகத்திற்கு பேக்கெட்டெல்லாம் வேண்டாம், அண்டாவில் ஊற்றுங்கள்” என்று பேசினார்.

இதனால் இரத்தம் கொதித்தெழுந்த எஸ்.டி.ஆர் ரசிகர்கள் பலரும், அண்டாவை வாங்கி வைத்துக் கொண்டு படத்தின் ரிலீசுக்கு தயாராகி வருகின்றனர். முன்னதாக தமிழக பால் முகவர்கள் சங்கம் சார்பாக பொன்னுசாமி தலைமையில் ரசிகர்கள் பால் திருடுவதை தடுக்குமாறு காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், அண்டாவுடன் தயாராகி வரும் ரசிகர்களை பார்த்தால், பிப்ரவரி 1ம் தேதி தியேட்டர்கள் முழுவதும் பால் வெள்ளம் தான் ஓடும்போல் இருக்கிறது.

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Actor simbu fans ready anda

Best of Express