தனுஷ் பட நடிகையிடம் டான்ஸ் கற்றுக்கொண்ட சிம்பு; இந்த தகவல் புதுசா இருக்கே... அந்த நடிகை யார் தெரியுமா?
நடிகை சரண்யா மோகனிடம், சிம்பு பரத நாட்டியம் கற்றுக் கொண்ட தகவல் இப்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இது குறித்த சுவாரசிய சம்பவத்தை சரண்யா மோகன் தற்போது தெரிவித்துள்ளார்.
நடிகை சரண்யா மோகனிடம், சிம்பு பரத நாட்டியம் கற்றுக் கொண்ட தகவல் இப்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இது குறித்த சுவாரசிய சம்பவத்தை சரண்யா மோகன் தற்போது தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் துணை நடிகை கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும், சிலரை அவ்வளவு எளிதாக மறக்க முடியாது. அந்த வரிசையில் நடிகை சரண்யா மோகனுக்கு தனி இடம் இருக்கிறது என்றே கூறலாம்.
Advertisment
தமிழில் 'யாரடி நீ மோகினி', 'பஞ்சாமிர்தம்', மகேஷ் சரண்யா மற்றும் பலர்' 'வேலாயுதம்' உள்ளிட்ட சில படங்களில் சரண்யா மோகன் நடித்துள்ளார். கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட இவர், பல்வேறு மலையாள திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.
இந்நிலையில், தமிழ் சினிமாவில் சிறப்பாக நடனமாடக் கூடியவர் என்று பெயர் பெற்ற சிம்பு, சரண்யா மோகனிடம் பரத நாட்டியம் கற்றுக் கொண்டதாக பரவும் ஒரு தகவல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பான சுவாரசிய சம்பவத்தை அவள் விகடன் யூடியூப் சேனலில் சரண்யா மோகன் குறிப்பிட்டுள்ளார்.
Advertisment
Advertisements
அதன்படி, "மார்ஷியல் ஆர்ட்ஸ் கற்றுக் கொண்டிருந்த போது, சிம்புவிற்கு தலையில் லேசாக அடிபட்டது. அப்போதைய சூழலில் நாங்கள் வசித்த இடத்தில் மருத்துவர்கள் இல்லை. அதனால், சிம்புவை பார்ப்பதற்காக எனது கணவருடன் இணைந்து சென்றேன்.
காயல் லேசானதாக இருந்ததால் பிரச்சனை ஏற்படவில்லை. அப்போது, உடல் எடையை குறைக்கும் முயற்சியில் சிம்பு ஈடுபட்டிருந்தார். எனவே, காலை 4 மணி முதல் இரவு வரை களரி, யோகா, உடற்பயிற்சி என்று நிறைய முயற்சிகளில் ஈடுபட்டிருந்ததாக அவர் கூறினார்.
மேலும், பரதநாட்டியம் கற்றுக் கொடுக்க ஆண்கள் யாராவது அங்கு இருக்கிறார்களா என்று என்னிடம் கேட்டனர். ஆனால், பரதநாட்டியம் கற்றுக் கொடுக்கக் கூடிய ஆண்கள் இப்பகுதியில் இல்லை.
எனவே, ஆட்சேபனை இல்லையென்றால் நான் கற்றுக் கொடுக்கலாமா என்று கேட்டேன். சிம்புவும் உடனடியாக சம்மதம் தெரிவித்து விட்டார். இதன் தொடர்ச்சியாக, தினமும் ஒரு மணி நேரம் சிம்புவிற்கு பரதநாட்டியம் கற்றுக் கொடுத்தேன்" என்று சரண்யா மோகன் தெரிவித்துள்ளார்.