சிம்புவின் முதல் அரசியல் ‘மாநாடு’ .. எங்கு, எப்போது தெரியுமா?

'காற்றின் மொழி' படத்தில் கௌரவ வேடத்தில் சிம்பு ஒப்புக்கொண்டுள்ளார்.

நடிகர் சிம்பு   தனது அடுத்த படம் குறித்த முக்கிய அறிவிப்பை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவின் சர்ச்சை நாயகன் என்றால்  பெரும்பாலோனார் நடிகர் சிம்புவை தான்  கூறுவார்கள்.  படங்களில் தொடங்கி ,  ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு  வரும் நேரம் , ஹீரோயின் தேர்வு என சிம்பு மீதான விமர்சனம்  ஏகப்பட்டது இருந்தாலும் அவரின்  ரசிகர்கள் எந்த நேரத்திலும் சிம்புவை விட்டு கொடுத்ததில்லை.

சமீப காலமாக பொது நிகழ்சிகள், டிவி நிகழ்ச்சிகளில் அடிக்கடி முகம் காட்டும்  சிம்பு இனிமேல் தான் தேர்வு செய்து நடிக்க இருக்கும் படங்கள் என் ரசிகர்களுக்காக மட்டுமே என்று அதிரடியாக கூறி இருந்தார்.  சிம்புவுக்கு சினிமா இன்ஸ்ட்ரீயில் பல நண்பர்கள் இருக்கின்றனர் என்பது எல்லோருக்கும் தெரியும்.

நட்பை நம்பி நான் பலமுறை ஏமாற்றப்பட்டு இருக்கிறேன்  என்று சிம்பு பகிரங்கமாக பல இடங்களில் கூறியுள்ளார். ஜல்லிக்கட்டில் தொடங்கி, காவிரி பிரச்சனை வர அரசியல் தொடர்பான பிரச்சனைகளில் நடிகர் சிம்பு  பல  கருத்துக்களை அதிரடியாகவும் கூறி வருகிறார். இந்நிலையில் தான்  நடிகர் சிம்பு அடுத்ததாக இயக்குனர் வெங்கட் பிரபுடன் கைக்கோர்த்துள்ளார்.

இந்த படத்தில் நடிக்க சிம்பு தனது சம்பளத்தை பாதியாக குறைத்திருந்தது  அனைவருக்கும் தெரிந்த ஒன்று.     அதே போல்  நடிகை ஜோதிகா நடிக்கும்  ‘காற்றின் மொழி’ படத்தில் கௌரவ வேடத்தில் சிம்பு ஒப்புக்கொண்டுள்ளார். சிம்புவின் இந்த வேகம் மற்றும் புதிய மாற்ற அவரின் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்துள்ளது.

இந்நிலையில், சிம்புவின் வேகத்தை அதிகரிக்கும் வகையில் சிம்பு – வெங்கட் பிரபு இணையும் படத்தின் தலைப்பு தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. ‘மாநாடு’ என்று இந்த படத்திற்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. எப்போதும் காமெடியை மையமாக வைத்து படம் இயக்கி வரும் வெங்கட் பிரபு இப்படத்தின் காமெடியுடன் அரசியலையும் மையமாக வைத்து கதை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒருவேளை அரசியல் குறித்த படமாக இருந்தால் இந்த படத்தில்  தமிழகத்தில் பெரிய பிரச்சனையாக இருக்கும் காவிரி விவகாரம், ஸ்டெர்லைட், ஜல்லிக்கட்டு போன்ற பிரச்சனைகளை பற்றி படத்தில் பேச வாய்ப்புள்ளதாகவும் நம்ப படுகிறது.

×Close
×Close