/tamil-ie/media/media_files/uploads/2018/08/actor-simbu.jpg)
actor simbu, நடிகர் சிம்பு
நடிகர் சிம்பு முதன் முறையாக இயக்குநர் சுந்தர் சியுடன் புதிய படத்தில் கைக் கோர்த்துள்ளார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.
சுந்தர் சி இயக்கத்தில் நடிக்கும் நடிகர் சிம்பு:
இயக்குநர் த்ரிவிக்ரம் இயக்கத்தில் பவன் கல்யாண் சமந்தா இணைந்து நடித்த அத்திரண்டிகி தாரேதி என்ற படம் கடந்த 2013ம் ஆண்டு வெளியானது. இப்படம் அதிக வசூலை குவித்து சாதனை படைத்தது. மேலும் 4 நந்தி விருதுகளைப் பெற்ற இப்படம் கன்னடம் மற்றும் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்நிலையில் தற்போது இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை லைக்கா நிறுவனம் வாங்கியுள்ளது. தமிழில் இப்படத்தை சுந்தர்.சி இயக்க உள்ளார். படத்தின் ஹீரோவாக நடிகர் சிம்பு நடிக்கிறார். இத்தகவலை லைக்கா நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
August 2018We are very Happy to announce the exciting collaboration of Ace Director #SundarC & Mr Mass #Simbu under our banner for a very exciting venture! Shoot commences soon. Gearing up for a January 2019 release. More updates coming up !!
— Lyca Productions (@LycaProductions)
We are very Happy to announce the exciting collaboration of Ace Director #SundarC & Mr Mass #Simbu under our banner for a very exciting venture! Shoot commences soon. Gearing up for a January 2019 release. More updates coming up !!
— Lyca Productions (@LycaProductions) August 14, 2018
அதில் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக தெரிவித்திருப்பதோடு 2019ம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் இப்படம் திரைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.