நடிகர் சிம்பு மீண்டும் முன்னாள் காதலியுடன் சேர்ந்து நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு வந்தா ராஜாவாக தான் வருவேன் திரைப்படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிக்க உள்ளார்.
நடிகர் சிம்பு – ஹன்சிகா
இந்நிலையில் தற்போது தன்னுடைய முன்னாள் காதலியான ஹன்சிகாவின் மஹா திரைப்படத்திலும் கவுரவ தோற்றத்தில் நடிக்க ஒப்பந்தமாகிஇருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகளுக்காக சிம்பு இஸ்தான்புல் செல்கிறாராம். பிளாஷ்பேக் காட்சியில் சிம்பு வருவார் எனவும் கூறபடுகிறது. 7 நாட்கள் இப்படத்திற்காக கால்ஷீட் கொடுத்துள்ளார்.
OFFICIAL: #Simbu is back with #Hansika #STR @hariharannaidu @EtceteraEntert1 @GhibranOfficial @Act_Srikanth @dir_URJameel pic.twitter.com/LIJbdQaxKN
— PRO Kumaresan (@urkumaresanpro) 5 March 2019
மேலும் இப்படத்தில் பாடல் ஒன்றிற்கும் நடமாட உள்ளாராம். ஏற்கனவே இவர் வாலு படத்தில் இணைந்து நடித்திருந்தனர். அப்போது இவர்களுக்கிடையே காதல் மலர்ந்தது ஆனால் பின்வரும் காலத்தில் அந்த காதல் முறிந்தது. தற்போது மீண்டும் இணைய உள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.