செஃப் வெங்கடேஷ் பட், சிங்கம் புலியின் மனைவியின் பணிகள் குறித்தும் கேட்டதற்கு, நடிகர் சிங்கம் புலி தன்னுடைய மனைவி ராணுவத்தில் கர்ணலாக இருக்கிறார் என்றும் அவர் கார்கில் போரில் பணியாற்றியது குறித்தும் உணர்வுப் பூர்வமாகப் பகிர்ந்துகொண்டார்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டாப் குக்கு டுப் குக்கு நிகழ்ச்சியில் செஃப் வெங்கடேஷ் பட், நடிகர் சிங்கம் புலியிடம் அவருடைய மனைவியின் பணி குறித்து கேட்டதற்கு, சிங்கம் புலி தனது மனைவி ராணுவத்தில் கர்ணலாக இருக்கிறார் என்றும் அவர் கார்கில் போரில் பணியாற்றியுள்ளார் என்றும் தெரிவித்தார். இதைக் கேட்டு டாப் குக்கு நிகழ்ச்சியில் இருந்த அனைவரும் ஒரு சல்யூட் அடித்து பாராட்டினர்.
சன் டிவியில் சமையல் பிளஸ் நகைச்சுவை என டாப் குக்கு நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த டாப் குக்கு நிகழ்ச்சியில், பிரபல செஃப் வெங்கடேஷ் பட் சமையல் நடுவராக இருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் நடிகர் சிங்கம் புலி கலந்துகொண்டார். அவரிடம் செஃப் வெங்கடேஷ் பட், சிங்கம் புலியின் மனைவியின் பணிகள் குறித்தும் கேட்டார். அதற்கு நடிகர் சிங்கம் புலி தன்னுடைய மனைவி ராணுவத்தில் கர்ணலாக இருக்கிறார் என்றும் அவர் கார்கில் போரில் பணியாற்றியது குறித்தும் உணர்வுப் பூர்வமாகப் பகிர்ந்துகொண்டார்.
“நீங்க கல்யாணம் பண்ணும் போது அவங்க கேப்டனாக இருந்து இப்போ அவங்க நாட்டை காப்பாத்துற உன்னதமான செயலை செய்துட்டு இருக்காங்க. உங்களுடைய மனைவி பற்றி சொல்லுங்க” என்று வெங்கடேஷ் பட் சொன்னதும் சிங்கம் புலி தன்னுடைய மனைவி குறித்து கூறினார்.
டாப் குக்கு நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சிங்கம் புலி “தன்னுடைய மாமன் மகளை திருமணம் செய்து கொண்டதாகத் தெரிவித்தார். அவர்கள் அந்தமானிலேயே பிறந்து வளர்ந்தவர், இப்போது ராணுவத்தில் கர்ணலாக இருக்கிறார்.” என்று தெரிவித்துள்ளார்.
தனது மனைவி கார்கில் போரில் பணியாற்றியது குறித்து நடிகர் சிங்கம் புலி கூறுகையில், “கார்கில் போரில் என்னுடைய மனைவி இருந்திருக்காங்க. அதில் அந்த ராணுவ வீரர்கள் எல்லாம் பங்கரில் இருப்பார்கள் இல்லையா அப்படி 60 நாட்கள் தொடர்ந்து அதில் அவர் வேலை செய்திருக்கிறார். போர் முடிந்ததற்கு பிறகு, குடியரசு தலைவர் எல்லாரும் அந்த கார்கில் போரில் பணியாற்றியவர்களுக்கு அவர்களிடம் உங்களுக்கு என்ன வேண்டும் என சாய்ஸ் கேட்டிருக்காங்க... அப்போ எனது மனைவி என்ன வேணாலும் கேட்டிருக்கலாம், அதை அவங்க நிறைவேற்றி இருப்பார்கள். இடம் வேண்டும் என்று, பெட்ரோல் பங்க்... இப்படி என்ன வேணும்னாலும் கேட்டு இருக்கலாம். ஆனால், என்னுடைய மனைவி எங்க அம்மா அப்பாகூட இருக்க வேண்டும் ஹோம் பிளேயர்க்கு போகணும்னு கேட்டிருக்கிறார். என்னுடைய மனைவியின் ஊர் அந்தமான் என்பதால் அவருக்கு அங்கே 5 வருடங்கள் தன்வந்திரி ஹாஸ்பிடலில் வேலை பார்த்தார்கள்.
அது முடிந்த பிறகு, நாங்கள் திரிபுரா போனோம். அங்கிருந்து பூனே, அதற்குப் பிறகு ராஞ்சி, டேராடோ, ஹைதராபாத் இப்போ ஜபல்பூர் என்று பல இடங்களுக்கு மாறி இருக்கிறார். இப்போ என்னுடைய மனைவி கர்ணலாக இருக்கிறார்” என்று சிங்கம்புலி கூறினார். இதைக் கேட்டு நெகிழ்ச்சி அடைந்த டாப் குக்கு நிகழ்ச்சியில் அனைவரும் சல்யூட் அடித்து பாராட்டியுள்ளனர்.
நடிகர் சிங்கம் புலி தனது மனைவியைப் பற்றி பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்க்கும் நெட்டிசன்கள் நடிகர் சிங்கம் புலியின் மனைவியைப் பாராட்டி வருகிறார்கள்.
நடிகர் சிங்கம் புலி என்று பிரபலமாக அறியப்பட்டாலும், உதவி இயக்குனர், கதை ஆசிரியர், இயக்குனர் என பன்முகத் திறமை கொண்டவர். ரெட், மாயாவி படத்தை ஆகிய படத்தை இயக்கி உள்ளார்.
மாயாண்டி குடும்பத்தார் படத்தில், நடித்ததன் மூலம் சிங்கம் புலிக்கு பேரும் புகழும் கிடைத்து பிரபலமானார். அந்த படத்தில் குழந்தை போல குச்சி ஐஸ் சாப்பிட்டுக்கொண்டு நடித்திருப்பார். சிங்கம் புலி ஸ்கிரீனில் வந்தாலே நகைச்சுவைக்கு தியேட்டரே சிரிபலையில் அதிரும்.
தொடர்ந்து நகைச்சுவை கதாபாத்திரம், குணச்சித்திரப் பாத்திரங்களில் நடித்து வந்த சிங்கம் புலி, திடீரென யாரும் எதிர்பார்க்காத வகையில், விஜய் சேதுபதியின் மகாராஜா படத்தில் வில்லனாக நடித்து மிரட்டி இருக்கிறார். பாலியல் வன்புணர்வு செய்யும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள சிங்கம் புலி நடிப்புக்கு பாராட்டுகள் வந்தாலும் அவரை வில்லனாக ஏற்றுக்கொள்ள முடியாமல் ரசிகர்களிடம் இருந்து விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.