நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. வசூலில் ரூ.400 கோடியை தாண்டிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்தப் படத்தில் கன்னட நடிகர் சிவ ராஜ்குமார் (சிவாண்ணா) முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தக் காட்சிகள் பலரும் பகிரப்பட்டுவருகிறது.
கன்னட ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ் ரசிகர்களும் சிவாண்ணா நடிப்பை வெகுவாக பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில், சிவ ராஜ்குமார் ரஜினிகாந்த் உடனான அனுபவம் குறித்து தமிழில் பகிர்ந்துக்கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், “சென்னை எனக்கு வாழ்க்கையில் நிறைய கொடுத்துள்ளது. சென்னையை ஒருபோதும் மறக்க மாட்டேன். எனக்கு உணவு, கல்வி கொடுத்த இடம் இதுதான்” என்றார்.
தொடர்ந்து, ரஜினிகாந்த் படம் பார்த்துவிட்டு பாராட்டினாரா? எனக் கேட்டதற்கு, “ரஜினிகாந்த் தற்போது இமாச்சலப் பிரதேசத்தில் உள்ளார். அவரின் அழைப்புக்காக காத்திருக்கிறேன்” என்றார்.
மேலும், “நான் மீண்டும் சென்னை வந்து அவரை சந்திப்பேன்” என்றார்.
இதையடுத்து ஜெயிலர் சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த நிகழ்வு குறித்து பேசும்போது, “நான் சூட்டிங் ஸ்பார்ட்டில் அவரை அப்படியே நின்று பார்த்துக்கொண்டிருந்தேன்.
அவரு ஸ்டைலா பேசிக்கொண்டிருந்தார். அவர் கண்ணால் என்னை திரும்பி பார்த்தார். நான் அவரையை பார்த்துக்கொண்டு இருந்தேன். நான் அப்போது அவரிடம் சார் ஒருதடவை நான் உங்களை கட்டிப் பிடிக்கலாமா? எனக் கேட்டேன். நான் அவரை கட்டிப் பிடித்தேன். நீங்கள் நம்ப மாட்டீங்க. நான் 3 நாள்கள் குளிக்க கூட இல்லை” என்றார்.
மேலும் தமக்கு கமல்ஹாசன் பிடிக்கும் என்றும் அவரின் ரசிகர் என்றும் கூறினார். ஜெயிலர் படத்தில் தனது தோற்றம் குறித்து கேட்டதற்கு, “அதற்கு தாம் மட்டும் காரணம் அல்ல. இயக்குநர், கேமராமேன் என பலரும் உழைப்பார்கள். அவர்கள்தான் அந்தத் தோற்றத்தை கொண்டுவருவார்கள்.
மேஜிக் என்பது வெளியில் இருந்து வருவது தானே” என்றார். சிவ ராஜ் குமார் கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரின் மூத்த மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“