Advertisment

சிவகார்த்திகேயனுக்கு இந்த முறை மிஸ் ஆகாது... ஏன்னா தயாரிப்பு நிறுவனம் அப்படி

author-image
WebDesk
Mar 08, 2019 15:15 IST
sivakarthikeyan, சிவகார்த்திகேயன்

sivakarthikeyan, சிவகார்த்திகேயன்

தளபதி மற்றும் சூப்பர் ஸ்டார் படங்களை தொடர்ந்து தற்போது பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனமாக சன் பிக்சர்ஸ், சிவகார்த்திகேயன் வைத்து படம் தயாரிக்கிறது.

Advertisment

தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று சன் பிக்சர்ஸ். கடந்த ஆண்டு முதல் முழுவீச்சில் படம் தயாரிக்கும் பணியில் இந்த நிறுவனம் களமிறங்கியது. விஜய் மற்றும் ரஜினியை வைத்து படமெடுத்த இந்நிறுவனம், இப்போது சிவகார்த்திகேயனை வைத்து படமெடுக்க உள்ளது.

கடந்த அண்டு வெளியான சர்கார் மற்றும் 2.0 பெரிய அளவில் ஹிட் அடித்தது. இந்த ஆண்டின் தொடக்கத்திலும் இவர்களின் தயாரிப்பில் வெளியான பேட்ட படம் பெரும் அளவில் வரவேற்பை பெற்றது. சன் பிக்சர்ஸின் தயாரிப்பு என்றாலே ஆடியோ வெளியீடு முதல் படத்தின் ரிலீஸ் வரை அனைத்துமே பிரம்மாண்டம் தான். கோடி கோடியாக கொட்டி படம் எடுப்பதும், அதில் பல மடங்கு கோடிகளை வசூப்பதும் இவர்களுக்கே உரிய வித்தை.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன்

இத்தகைய நிறுவனத்தின் தயாரிப்பில் சிவகார்த்திகேயனும் நடிக்க இருக்கிறார் என்று அவர்கள் வெளியிட்ட அறிவிப்பால சிவாவின் ரசிகர்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்.

March 2019

சீமராஜா படத்தை தொடர்ந்து சயின்ஸ் பிக்‌ஷன் படம் ஒன்றில் நடித்து வருகிறார் சிவா, இன்னும் அந்த படத்திற்கு பெயர் வைக்காததால் எஸ்.கே 14 என்று சொல்லப்படுகிறது. நேற்று இன்று நாளை படத்தை இயக்கிய ரவிக்குமார் இதனை இயக்குகிறார். இதை அடுத்து எஸ்.கே15 படத்தை பி.எஸ் மித்ரன் இயக்குவதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் சிவாவின் 16 வது படத்தை பாண்டிராஜ் இயக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதை தயாரிப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இதை தவிர, இப்படம் குறித்த வேறு எந்த தகவலும் வெளியாகவில்லை.

#Sivakarthikeyan #Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment