/indian-express-tamil/media/media_files/2025/09/09/actor-sivakumar-angry-with-director-bala-tamil-news-2025-09-09-22-30-05.jpg)
சூர்யா- விக்ரம் நடிப்பில் வெளியான ‘பிதாமகன்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதிலும், அந்த படத்தில் லைலாவின் காமெடிகள் அட்டகாசமான ஒன்றாக அமைந்தது.
இயக்குநர் பாலா தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத இயக்குநர்களில் ஒருவர். இவர் தனக்கென ஒரு ஸ்டைலில் படங்கள் இயக்கி மக்கள் மனதில் இடம் பிடித்தவர். பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குநராக இருந்த பாலா கடந்த 1999-ஆம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியான ‘சேது’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.
இந்த படத்தில் விக்ரம் நடிப்பு பெரிதும் பேசப்பட்டதுடன் அவரின் கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுதியது. அதிலும், விக்ரமிற்கு மொட்டையடித்து சங்கிலியால் கட்டிப்போட்டிருக்கும் காட்சியெல்லாம் பார்ப்போரை கண்கலங்க வைத்தது. சேது திரைப்படத்தை விநியோகஸ்தர்கள் வாங்க மறுத்தாலும் படம் குறித்து மக்கள் பேசியதைத் தொடர்ந்து இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இதையடுத்து சூர்யா - பாலா கூட்டணியில் வெளியான ‘நந்தா’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்திற்கு முன்பு வரை சூர்யாவிற்கு நடிக்க வராது என பலர் கேலி செய்த நிலையில் அதையெல்லாம் இப்படம் தகர்த்தெறிந்தது.
தொடர்ந்து, சூர்யா- விக்ரம் நடிப்பில் வெளியான ‘பிதாமகன்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதிலும், அந்த படத்தில் லைலாவின் காமெடிகள் அட்டகாசமான ஒன்றாக அமைந்தது. இந்த படத்தில் நடிகர் விக்ரம் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்த படத்தில் இடம்பெற்றிருந்த ‘தக தகவென ஆடவா’ பாடலுக்கு சூர்யாவும் சிம்ரனும் நடனமாடும் காட்சி இன்றளவும் பேசும் விதமாக அமைந்திருந்தது. பாலா இயக்கத்தில் வெளியான ‘நான் மகான் அல்ல’, ‘பரதேசி’, ‘அவன் இவன்’ ‘தாரை தப்பட்டை’, ‘வணங்கான்’ போன்ற திரைப்படங்கள் கலவையான விமர்சனத்தை பெற்றது.
இந்நிலையில், பிகைண்ட்வுட்ஸ் நிகழ்ச்சி ஒன்றில் இயக்குநர் பாலாவிடம் நடிகர் சிவகுமார் சில கேள்விகளை கேட்டார். அதில், ‘பிதாமகன்’ படத்தில் சிம்ரனையும், சூர்யாவையும் தக தகவென ஆடவிட்டு கிண்டல் பணிட்டான். மனசார சொல்லு என்ன ஐடியாவில் அந்த பாட்ட பண்ணுன. என்னை மானபங்கம் செய்ய பண்ணுனியா. உண்மையை சொல்லு” என்று சிவகுமார் கேட்பார்.
இதற்கு பதிலளித்த இயக்குநர் பாலா, “நீங்கள் ஆடியது மிகவும் நகைச்சுவையாக இருந்தது” என்றார். இதனை பார்த்த ரசிகர்கள் பாலா இப்படியும் பேசுவாரா என்ற ஆச்சர்யத்தில் கைகளை தட்டி ஆரவாரம் செய்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.