/indian-express-tamil/media/media_files/2025/09/04/actor-sivakumar-2025-09-04-17-13-56.jpg)
நடிகை பாரதி தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ்த் திரைப்படங்களில் 'நம்ம வீட்டு லட்சுமி', 'சந்திரோதயம்', 'நாடோடி', 'உயர்ந்த மனிதன்', 'நில் கவனி காதலி', 'ஆயுதம்', 'அம்முவாகிய நான்' போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
1975 ஆம் ஆண்டில், அவர் பிரபல கன்னட நடிகர் டாக்டர் விஷ்ணுவர்தனை மணந்தார். இவர்களுக்கு கீர்த்தி மற்றும் சந்தனா என்ற இரண்டு வளர்ப்பு மகள்கள் உள்ளனர். கன்னடத் திரையுலகில் சூப்பர் ஸ்டாராகக் கொண்டாடப்பட்ட விஷ்ணுவர்தன், சிவாஜி கணேசனுடன் 'உயர்ந்த மனிதன்' படத்தில் நடித்தவர். அவர் மறைந்த பிறகு, அவரது நினைவாக ஒரு நினைவிடம் அமைக்கும் பணியில் பாரதி தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் அவள் விகடனுக்கு அளித்த ஒரு பேட்டியில், நடிகை பாரதி நடிகர் சிவகுமாருடன் தனக்கு இருந்த நல்ல உறவு பற்றி மனம் திறந்து பேசினார். அப்போது, சிவகுமார் உடன் இரண்டு படங்களில் நடிக்க தான் நிராகரிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். இதற்குக் காரணம், அவர்களது உயர வேறுபாடு. தன்னை விட பாரதி மிகவும் உயரமாக இருந்ததால், அவரால் ஜோடியாக நடிக்க முடியாது என சிவகுமார் அப்போது கூறியதாக பாரதி தெரிவித்தார்.
ஆரம்பகாலத்தில் இந்த உயர வேறுபாடு தனக்கு ஒரு தடையாக இருந்ததாகவும், ஆனால் பின்னர் அது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை என்றும் அவர் கூறினார். காட்சிகளில் சக நடிகர்களின் உயரத்திற்கு ஏற்ப தன்னை சரிசெய்து கொள்ள வேண்டியிருந்தது எனவும், அதற்கேற்ப இயக்குநர்களும் சரிசெய்தார்கள் எனவும் அவர் தெரிவித்தார். சிவகுமார் உயர வேறுபாட்டைக் காரணம் காட்டியபோதிலும், நாகேஸ்வர ராவ் மற்றும் என்.டி. ராம ராவ் போன்ற நடிகர்கள் தனக்கு இணையாக இருந்தனர் என்பதையும் அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டார்.
நடிகர் சிவகுமாருடன் இரண்டு படங்களில் நடிக்க இருந்த வாய்ப்பை இழந்ததாக பாரதி தெரிவித்தார். அவங்க ரொம்ப உயரம், நான் குள்ளம் என்னால நடிக்க முடியாது என்று சிவகுமார் கூறியதால் அந்தப் படங்களிலிருந்து தான் நீக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். தனது தொழில் வாழ்க்கையின் ஆரம்பத்தில் இந்த உயர வேறுபாடு ஒரு பெரிய தடையாக இருந்ததாகவும் குறிப்பிட்டார். அதுமட்டுமின்றி சிவக்குமார் நல்ல மனிதர் தற்போது கூட என்னிடம் நன்றாக பேசுவார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.