நடிகர் சோனு சூட் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை அறிவிப்பு

நடிகர் சோனு சூட் உயர்கல்வியைத் தொடர விரும்பும் சலுகை இல்லாத மாணவர்களுக்கு உதவித்தொகையை அறிமுகப்படுத்தியுள்ளார். மாணவர்கள் தங்கள் லட்சியத்தை அடையும் பயணத்தில் பணப் பிரச்னை வரக்கூடாது என்று அவர் தெரிவித்துள்ளார்.

By: September 13, 2020, 5:10:56 PM

நடிகர் சோனு சூட் உயர்கல்வியைத் தொடர விரும்பும் சலுகை இல்லாத மாணவர்களுக்கு உதவித்தொகையை அறிமுகப்படுத்தியுள்ளார். மாணவர்கள் தங்கள் லட்சியத்தை அடையும் பயணத்தில் பணப் பிரச்னை வரக்கூடாது என்று அவர் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் சோனு சூட், உயர்கல்வியைத் தொடர விரும்பு சலுகை இல்லாத மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகயை வழங்குவதாக அறிவித்துள்ளார். மேலும், மாணவர்கள் தங்கள் லட்சியத்தை அடையும் பயணத்தில், பணம் ஒரு பிரச்னையாக வரக் கூடாது என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


இது குறித்து சோனு சூட் தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்துஸ்தான் பதேகா தபி, ஜப் பதங்கே சபி! உயர் கல்விக்கான மாணவர்களுக்கு முழு உதவித்தொகையைத் தொடங்குவது. பணப் பிரச்னை யாரையும் தங்கள் இலக்குகளை அடைவதைத் தடுக்கக்கூடாது என்று நான் நம்புகிறேன். உங்களுடைய விண்ணப்பங்களை scholarships@sonusood.me என்ற மின்னஞ்சல் முகவரிக்கு (அடுத்த 10 நாட்களுக்குள்) அனுப்ப வேண்டும். அதன் பிறகு, நான் உங்களை அணுகுவேன்.” என்று தெரிவித்துள்ளார்.

சோனு சூட் மற்றொரு ட்வீட்டில், “நம்முடைய திறனும் கடின உழைப்பும் நம்முடைய எதிர்காலத்தை தீர்மானிக்கும்! நாம் எங்கிருந்து வருகிறோம், நமது பொருளாதார நிலைமைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த திசையில் எனது முயற்சிகளில் ஒன்று – உயர் கல்விக்கான முழு உதவித்தொகை வழங்குகிறேன். இதன் மூலம் நீங்கள் முன்னேறி நாட்டின் முன்னேற்றத்திற்கு பங்களிக்க முடியும்.” என்று தெரிவித்துள்ளார். மேலும், scholarships@sonusood.me என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்புமாறு தெரிவித்துள்ளார்.

முன்னதாக நடிகர் சோனு சூட், கொரோனா வைரஸ் காரணமாக நாடு தழுவிய பொதுமுடக்கத்தை அமல்படுத்த அரசாங்கம் உத்தரவிட்டதையடுத்து, பெரிய நகரங்களில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல உதவி செய்தார். இதன் மூலம், சோனு சூட் இந்திய அளவில் கவனத்தைப் பெற்றார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Actor sonu sood announces scholarship for students

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X