கோவில் விழா ஒன்றில் நடிகர் சூரி ஆடும் ஒயிலாட்டம் பற்றிய சிறு வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் கவுண்டர்மணி, செந்தில், விவேக், வடிவேலு, சந்தானம், யோகிபாபு என்ற வரிசையில் நடிகர் சூரிக்கு முக்கிய இடம் இருக்கிறது. இவரது மொழிநடை மற்றும் காமெடி சென்ஸ் பலரால் ரசிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடிகர் சூரி மதுரையில் நடைபெற்ற கோவில் விழா ஒன்றில் ஒயிலாட்டம் ஆடும் வீடியோ காட்சிகள் வெளியாகி வைராகி வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் அவர் விருமன் ஆடியோ வெளியிடும் விழாவில், ஏழை மக்களுக்கு கல்வி கொடுப்பது ஆயிரம் கோவிலை கட்டுவதற்கு சமம் என்று பேசியது சர்ச்சையானது. இந்நிலையில் இதற்கான விளகத்தை அவர் வழங்கினார். ” யார் மனதையும் புண்படுத்தும்படி நான் பேசவில்லை. நான் மதுரை மீனாட்சி அம்மன் பக்தன் “ என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் தற்போது வைரலாகும் வீடியோ அவரது கடவுள் பக்தியை வெளிப்படுத்தும் விதத்தில் இருக்கிறது.