/indian-express-tamil/media/media_files/2024/10/26/Qy8dJvwlWL2fEmrCKd4m.jpg)
கடந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதி விஜய் தனது கட்சியின் கொடியை அறிமுகம் செய்து வைத்திருந்தார். அப்போது மீனாட்சி அம்மன் கோயிலில் நடிகர் விஜயின் கட்சி கொடியை வைத்து நடிகர் சௌந்தரராஜா சிறப்பு பூஜை செய்திருந்தார்
நடிகர் விஜய்யின் த.வெ.க கட்சியின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சாலையில் நாளை ஞாயிற்றுக்கிழமை தொடங்கி நடைபெறுகிறது. தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இந்த மாநாட்டிற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து த.வெ.க கட்சியை சேர்ந்த தொண்டர்களும், நடிகர் விஜயின் ஆதரவாளர்களும் வருகை தர உள்ளனர்.
இந்நிலையில், சசிகுமார் நடிப்பில் வெளியான சுந்தரபாண்டியன் படத்தில் நடித்து பிரபலமடைந்த நடிகர் சௌந்தரராஜா இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவிருக்கிறார். இதற்காக சென்னை சாலை கிராமத்தில் உள்ள தனது வீட்டிலிருந்து சைக்கிள் மூலம் தனது பயணத்தை அவர் தொடங்கியுள்ளார். சாலிகிராமம் முதல் மாநாடு நடைபெறும் விக்கிரவாண்டி சாலை வரை வழிநெடுக அவர் சைக்கிளில் பயணம் செய்யப் போவதாக தெரிவித்துள்ளார். அவருடன் அவரது ஆதரவாளர்களும் சைக்கிளில் பயணம் செய்து த.வெ.க மாநாடு நடைபெறும் இடத்தை அடைய உள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதி விஜய் தனது கட்சியின் கொடியை அறிமுகம் செய்து வைத்திருந்தார். அப்போது மீனாட்சி அம்மன் கோயிலில் நடிகர் விஜயின் கட்சி கொடியை வைத்து நடிகர் சௌந்தரராஜா சிறப்பு பூஜை செய்திருந்தார். பின்னர், அந்தக் கொடியை நடிகர் விஜய்யின் முதல் மாநாட்டிற்கு கொண்டு சேர்ப்பேன் எனவும் தெரிவித்திருந்தார். தற்போது அந்த கொடியை எடுத்துக் கொண்டுதான் சௌந்தரராஜா தனது சைக்கிள் பயணத்தை தொடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: சக்தி சரவணன் - சென்னை.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.