கேரளா மாநிலம் திரிச்சூரை சேர்ந்தவர் நடிகர் ஸ்ரீஜித் ரவி. 2005-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான மாயகோஹம் என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமான இவர், தொடர்ந்து மலையாளத்தில் பல முனனணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
தொடர்ந்து 2012-ம் ஆண்டு தமிழில் இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில் பிரபு சாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான ‘கும்கி’ திரைப்படத்தில் வன அதிகாரி வேடத்தில் நடித்து தமிழில் அறிமுகமானார்.
அதன்பிறகு ஆர்யா மாதவன் இணைந்து நடித்த வேட்டை, விஷாலின் 'கதகளி' மற்றும் கதிரின் 'மத யானை கூட்டம்' ஆகிய படங்களிலும் நடித்து பிரபலமான ஸ்ரீஜித் சமீபத்தில் 'கள்ளன் டி சோசா' உட்பட பல மலையாள படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்தார்.
இந்நிலையில், கடந்த 2016-ம் ஆண்டு நடிகர் கேரளாவின் பாலக்காட்டில் 14 பள்ளி மாணவிகளிடம் பாலியல் தொடர்பான உடல் பாகங்களை காட்டியதாக கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அதன்பிறகு தமிழில் அசுரவதம், மலையாளத்தில் திரிச்சூர் பூரம் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்த ஸ்ரீஜத் ரவி, தற்போது மீண்டும் குழந்தைகள் மீதான பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு (ஜூலை 4) திருச்சூரில் உள்ள அய்யந்தோளில் உள்ள எஸ்என் பூங்காவிற்கு காரில் வந்த நடிகர், அங்கு விளையாடிக் கொண்டிருந்த 9 மற்றும் 14 வயதுடைய இரண்டு மைனர் சிறுமிகளுக்கு தனது தனது பாலியல் தொடர்பான உடல்பாகங்களை காண்பித்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் பூங்காவில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவானதை தொடர்ந்து, குற்றத்தை உறுதி செய்த திருச்சூர் போலீசார், ஸ்ரீஜித் ரவியை போக்சோ சட்டத்தின் (பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல்) கீழ் கைது செய்துள்ளனர். மூத்த நடிகரும் தொழிலதிபருமான டி.ஜி.யின் மகன். ஸ்ரீஜித் ரவிக்கு சஜிதா ஸ்ரீஜித் என்ற மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இவர் தமிழில் அறிமுகமான கும்கி படத்திலும் கூட லட்சுமி மேனன் தவறான எண்ணத்தில் இருப்பது போலவே காட்சிகள் அமைந்திருக்கும். ஆனால் தற்போது இவர் குழந்தைகளிடம் பாலியல் ரீதியாக நடந்துகொண்டது கும்கி படத்தில் நடிகர் தனது உண்மையான குணத்தை தான் அப்படி காண்பித்தாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“