வெளிநாட்டு தோழிகளுடன் வெகேஷன் சென்றுள்ள நடிகைர் ஸ்ரீகாந்தின் மனைவி வந்தனா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Advertisment
தமிழ் சினிமாவில் நடிகர்கள் மட்டுமல்லாமல் அவர்களின் மனைவிகளும் இளமை தோற்றத்திலேயே காட்சியளித்து வருகின்றனர். அந்த வகையில் முன்னணி நட்சத்திர தம்பதிகளாக வலம் வருபவர்கள் நடிகர் ஸ்ரீகாந்த் வந்தனா ஜோடி.
Advertisment
Advertisement
2002-ம் ஆண்டு ரோஜாக்கூட்டம் என்ற படத்தின் மூலம் திரையில் அறிமுகமான ஸ்ரீகாந்த் கடந்த 2008-ம் ஆண்டு வந்தனாவை திருமணம் செய்துகொண்டார்.
என்றும் இளமையாக காட்சியளிக்கும் வந்தனா தனது மகளுடன் புகைப்படம் வெளியிட்டால் கூட இருவரும் சகோதரிகள் என்று சொல்லும் அளவுக்கு இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
அதேபோல் சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் வந்தனா அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.
மேலும் ஸ்ரீகாந்த் வந்தனா ஜோடி அவ்வப்போது வெளிநாட்டுக்கு சுற்றுலா வெகேஷன் செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். அந்த வகையில் தற்போது இவர்கள் ஜோடான் நாட்டுக்கு சென்றுள்ளனர்.
இதில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது கணவர் ஸ்ரீகாந்துடன் இணைந்து புகைப்படங்கள் வெளியிட்ட வந்தனா தற்போது தனது வெளிநாட்டு தோழிகளுடன் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஜோர்டானில் உள்ள கடற்கரையில், கழுத்து கை மற்றும் கால்களில் சேற்றை பூசிக்கொண்டு குளியல் போடும் வந்தனா, சேற்றில் குளிப்பதால் கனிம சத்துக்கள் கிடைப்பாகாக கூறியுள்ளார்.
தற்போது தோழிகளுடன் வந்தனா வெளியிட்டுள்ள இந்த வெகேஷன் ட்ரிப் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“