வந்தா ராஜாவாத்தான் வருவேன்: சிம்பு ரொம்ப மாறிட்டாருங்க!

Actor Simbu: சிம்பு போன்ற திறமையுள்ள கலைஞர்களிடம் மக்களும் சினிமாதுறையை சார்ந்தவர்களும் எதிர்பார்ப்பது இதைத்தான்.

Vantha Rajavathan Varuven: தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கதாநாயக அந்தஸ்தை அடைந்தவர்களில் மிகப் பிரபலம் கமல்ஹாசன். அதேபோல் சிறுவயதிலேயே பல திறமைகளை தன்னுள் கொண்டவர் சிம்பு என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை.

ஆனால் காதல் சர்ச்சைகள், ஆல்பம் சர்ச்சை, மற்றும் கால்ஷீட் பிரச்னை என்று தொடர்ந்து வந்த விமர்சனங்கள் அவரது கேரியரை பாதித்தன. ஆனாலும் சிம்புவின் சினிமா மார்கெட், அவரால் மீட்டெடுக்கக்கூடிய அளவிலேயே உள்ளது. இதற்கு உதாரணம், செக்கச் சிவந்த வானம்!

அந்தப் படத்தில் சிம்புவின் பர்பார்மன்ஸும் அதற்கான வரவேற்பும் அவரால் பவராக வர முடியும் என்பதை தெள்ளத்தெளிவாக காட்டியது. சிம்புவும் சுதாரித்துக் கொண்டிருக்கிறார். இதன் ஒரு அம்சமாக, சுந்தர் சி -ன் வந்தா ராஜாவாகத்தான் வருவேன் படத்தில் கால்ஷீட் பிரச்சினைகள் வராமல் பார்த்துக் கொண்டு, தன் மேல் வந்த விமர்சனத்திற்க்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

கமெர்ஷியல் மற்றும் காமெடியில் சுந்தர் சி 20 வருடத்திற்கும் மேல் தமிழ் சினிமாவில் கோலேச்சி வருபவர் ஆவார். எனவே சிம்புவை வைத்து அவர் இயக்கியிருக்கும் வந்தா ராஜாவாகத்தான் வருவேன் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தப் படத்தின் டீசரும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

சிம்பு போன்ற திறமையுள்ள கலைஞர்களிடம் மக்களும் சினிமாதுறையை சார்ந்தவர்களும் எதிர்பார்ப்பது இதைத்தான்.

திராவிட ஜீவா

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close