/indian-express-tamil/media/media_files/2025/07/09/screenshot-2025-07-09-165609-2025-07-09-16-56-44.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/07/09/screenshot-2025-07-09-212632-2025-07-09-21-28-07.png)
நேரத்தில் அதிக சம்பளம் வாங்கி, தயாரிப்பாளர்களின் முதல் தேர்வாகவும் வலம் வந்தார். அவர் தான் நடிகர் சுமன். 1978-ம் ஆண்டு வெளியான ‘கருணை உள்ளம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார் சுமன். 80களில் தமிழ், தெலுங்கில் ரொமான்டிக் ஹீரோவாக வலம் வந்தார். மாஸ் ஹீரோவாக சிரஞ்சீவி முதல் தேர்வு என்றால் ரொமான்டிக் ஹீரோவாக சுமன் முதல் தேர்வாக இருந்தார். தமிழில் ரஜிக்கே டஃப் கொடுத்தார்.
/indian-express-tamil/media/media_files/2025/07/09/screenshot-2025-07-09-212641-2025-07-09-21-28-07.png)
80களில் ஒரு படத்துக்கு ரூ.5 லட்சம் ஊதியம் பெற்றார். இங்கே ரஜினியும், அங்கே சிரஞ்சீவியும் ஸ்டார் நடிகர்களாக இருக்கும்போதே அதிக சம்பளம் கொடுத்து இவரை ஒப்பந்தம் செய்ய தயாராக இருந்தனர் தயாரிப்பாளர்கள். பான் இந்தியா மொழி நடிகரான இவர் 700க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.
/indian-express-tamil/media/media_files/2025/07/09/screenshot-2025-07-09-212648-2025-07-09-21-28-07.png)
‘வீட்டுக்கு வீடு வாசப்படி’, ‘இளமைக் கோலம்’, ‘கடல் மீன்கள்’, ‘அதிரடி படை’ என பல படங்களில் நடித்தார். தெலுங்கில் கவனம் செலுத்திய சுமன் சிரஞ்சீவிக்கு டஃப் கொடுத்தார். தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்தார். ஆனால் ஒரு கட்டத்தில் அவரது சினிமா வாழ்க்கை சரிய தொடங்கியது. கடந்த 1988-ம் ஆண்டு 3 பெண்கள் சுமன் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தனர். இந்த புகாரைத் தொடர்ந்து சுமன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
/indian-express-tamil/media/media_files/2025/07/09/screenshot-2025-07-09-212658-2025-07-09-21-28-07.png)
இதனால் சுமனின் சினிமா வாய்ப்புகள் பறிபோய், அவரை நடிக்க வைக்க யாரும் முன்வரவில்லை. 2008-ம் ஆண்டு அவர் அளித்த பேட்டியில், சிறையில் தான் துன்புறத்தப்பட்டதாக கூறினார். மேலும் தான் நிரபராதி எனவும் கூறியிருந்தார். அதன்பிறகு அவர் வில்லன் கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கினார். ரஜினி நடித்த ‘சிவாஜி’ படத்தில் ஆதிகேசவன் கதாபாத்திரத்தில் மிரட்டியிருப்பார்.
/indian-express-tamil/media/media_files/2025/07/09/screenshot-2025-07-09-212708-2025-07-09-21-28-07.png)
விஜய் நடித்த ‘குருவி’, விஜயின் ‘வாரிசு’ படத்தில் நடித்திருந்தார். குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்தார். மேலும் சுமன், ராணுவ வீரர்களுக்கு தன்னுடைய 150 ஏக்கர் நிலம் கொடுக்க முன்வந்தது பலருக்கும் ஆச்சரியம் அளித்தது. இது தொடர்பாக அவர் கூறும்போது, “நான் அந்த நிலத்தை கார்கில் வீரர்களுக்கு கொடுத்துவிட்டேன். நாம் நிம்மதியாக இருக்க அவர்கள் தங்கள் உயிரை இழந்துள்ளார்கள்”
/indian-express-tamil/media/media_files/2025/07/09/screenshot-2025-07-09-165609-2025-07-09-16-56-44.jpg)
”கார்கில் போரின் போது கார்கில் ஃபண்ட் கலெக்ஷன் செய்த போது நிறைய நடிகர்கள், 1 லட்சம், 5 லட்சம் என பணம் கொடுத்தனர். ஆனால் எனது மனைவிதான் நிலமாக கொடுக்கலாம் என்றார். அந்த நிலம் 150 ஏக்கர். ஆனால் அங்கு நக்ஸலைட் பிரச்சினை இருந்ததால் பிறகு பார்த்துக்கலாம் என இருந்தேன். பின்னர் அந்த இடத்தை கொடுத்துவிட்டேன். அவர்கள் அங்கு கல்லூரியோ பள்ளியோ குடியிருப்போ எதை வேண்டுமானாலும் கட்டிக் கொள்ளட்டும்” என்று கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.