Advertisment
Presenting Partner
Desktop GIF

OTT-யில் வெளியான படத்துக்கு டிக்கெட் கேட்ட முதியவர்; தவறை உணர்ந்த சூர்யா

கங்குவா படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் 'ஜெய் பீம்' படம் குறித்து சூர்யா சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். ”அந்த படத்தை OTT-யில் வெளியிட்டத்தை தவறு என்று உணர்ந்தேன்” என கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Suriya Sivakumar x1

கங்குவா படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் 'ஜெய் பீம்' படம் குறித்து சூர்யா சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் இருந்து இந்திய சினிமா ரசிகர்கள், உலக சினிமா ரசிகர்கள் வரை அறியப்பட்ட ஒரு சிறந்த நடிகராக திகழ்கிறார். முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் சூர்யா தற்போது இவர் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

Advertisment

ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ள கங்குவா திரைப்படம் நவம்பர் 14-ம் தேதி வெளியாக உள்ளது. ரிலீஸுக்கு இன்னும் ஒரு வார காலமே உள்ள நிலையில், கங்குவா படத்தின் புரொமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கங்குவா படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் 'ஜெய் பீம்' படம் குறித்து சூர்யா சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

அப்போது சூர்யா கூறுகையில், “சிவா இயக்கத்தில் வெளியான 'அண்ணாத்த' படத்தை திரையரங்கில் பார்த்து விட்டு வெளியே வரும் போது அங்கு ஒரு முதியவர் ஜெய் பீம் படத்திற்கான டிக்கெட் குறித்து விசாரித்துக் கொண்டிருந்தார்.

நான் அவரிடம் சென்று ஜெய் பீம் படம் திரையரங்கில் வெளியாகவில்லை. OTT தளத்தில்தான் வெளியாகியுள்ளது என்று கூறினேன்.

ஆனால், அதை அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை. அப்போது தான் நான் ஜெய் பீம் படத்தை OTT-யில் வெளியிட்டத்தை தவறு என்று உணர்ந்தேன்” என கூறியுள்ளார்.

டி.ஜே. ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் திரைப்படம் ஒ.டி.டி-யில் வெளியானது. இந்த திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. நடிகர் சூர்யாவை ஒரு இந்திய நட்சத்திரமாக உயர்த்தியது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Actor Suriya
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment