மருத்துவ படிப்பு உள்ஒதுக்கீடு ; தமிழக அரசுக்கு நன்றி கூறிய சூர்யா...

மாணவர்களுக்கு துணை நிற்போம்... ஒன்றிணைந்து செயல்படுவோம்... என்றும் கருத்து!

மாணவர்களுக்கு துணை நிற்போம்... ஒன்றிணைந்து செயல்படுவோம்... என்றும் கருத்து!

author-image
WebDesk
New Update
actor suriya thanked tn government for passing the bill regarding medical seats reservation for government school kids

actor suriya thanked tn government for passing the bill regarding medical seats reservation for government school kids  : நீட் தேர்வு அச்சத்தால் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வுகள் அடிக்கடி அரங்கேறி வருகிறது. இதனை தொடர்ந்து மாநில மத்திய அரசின் கல்வி கொள்கைகளை கண்டிக்கும் வகையில் நடிகர் சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். கொரோனா போன்ற சூழ்நிலையில் மாணவர்களை தைரியமாக தேர்வெழுத அனுப்பி வைக்கின்றனர். ஆனால் இந்திய நீதித்துறையோ நீதியினை வீடியோ கால் மூலம் வழங்கி வருகிறது என்று கடுமையான கண்டனங்களை பதிவு செய்திருந்தார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியது.

Advertisment

மேலும் படிக்க : சூர்யா அறிக்கை ஏன் நீதிமன்ற அவமதிப்பாக கருதப்படுகிறது?

இந்நிலையில் தமிழக சட்டமன்றத்தில், அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு உள் இட ஒதுக்கீடாக 7.5% இட ஒதுக்கீட்டு மசோதாவை தாக்கல் செய்து நிறைவேற்றினார் தமிழக முதல்வர். அதற்கு மகிழ்ச்சி தெரிவிக்கும் வகையில் தமிழக அரசின் இந்த செயலை வரவேற்று ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகர் சூர்யா.

Advertisment
Advertisements

அதில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5% உள் ஒதுக்கீடு வழங்கப்படுவதை உறுதி செய்த தமிழக அரசுக்கும், உறுதுணையாய் இருந்த அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் என்று குறிப்பிட்டிருந்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Actor Suriya Neet

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: