/tamil-ie/media/media_files/uploads/2023/04/Surya-Kanguva.jpg)
ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் மிகப்பெரிய பொருள்செலவில் உருவாகி வரும் கங்குவா படத்தில் சூர்யா நடித்துவருகிறார்.
இந்தப் படம், முப்பரிமாண தொழில்நுட்ப உதவியுடன் பிரமாண்டமாக உருவாகிவருகிறது. 10 மொழிகளில் தயாராகும் இந்தப் படம் ரூ.350 கோடி பட்ஜெட்டில் உருவாகிவருகிறது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை பூந்தமல்லியில் உள்ள பிலிம்சிட்டியில் நடந்துவருகிறது. அப்போது நடிகர் சூர்யாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
அதாவது ரோப் கேமரா அறுந்து விழுந்து இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் நூலிழையில் சூர்யா தப்பித்துவிட்டார் என்றும் கூறப்படுகிறது.
இதையடுத்து நடிகர் சூர்யாவுக்க சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் நலமுடன் உள்ளார். இங்கு இந்தியன் 2 படமாக்கப்பட்டபோது கிரேன் கவிழந்து 2 பேர் உயிரிழந்தனர் என்பது நினைவு கூரத்தக்கது.
சூர்யாவின் கங்குவா படம் கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்துடன் மோத உள்ளது. கங்குவா படத்தில் சூர்யா ஜோடியாக பிரபல இந்தி நடிகை திஷா பதானி நடித்துள்ளார்.
இவர் தவிர முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, ஆனந்த ராஜ், கோவை சரளா, ஜெகபதி பாபு, பாபு தியோல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
“நான் நன்றாக உணர்கிறேன்”- சூர்யா
இந்த நிலையில் நண்பர்கள், நலம்விரும்பிகள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து நடிகர் சூர்யா ட்வீட் செய்துள்ளார். அதில், “தாம் நன்றாக உணர்வதாக” தெரிவித்துள்ளார்.
Dear Friends, well wishers & my #AnbaanaFans
— Suriya Sivakumar (@Suriya_offl) November 23, 2023
Heartfelt thanks for the outpouring ‘get well soon’ msgs.. feeling much better.. always grateful for all your love :)
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.