சிங்கம் 3 படத்திற்கு பிறகு நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஹரி 6 வது முறையாக இணைந்து ‘ யானை ’ என்ற படத்தில் பணியாற்ற இருக்கிறார்கள்.
கோலிவுட்டில் இருக்கும் முன்னணி நடிகர்களில் அளவுக்கடந்த ரசிகர் பட்டாளத்தை குவித்தவர் நடிகர் சூர்யா. வித்தியாசமான கதைகள் மற்றும் கதாப்பாத்திரங்கள் தேர்ந்தெடுப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். கொடுக்கும் படங்களில் ஆபாசங்கள் இருக்கக் கூடாது என்பதிலும், பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன் குடும்பமாக வந்து படத்தை பார்க்க வேண்டும், அதற்கு ஏற்றார்போல் கதைகளை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதிலும் உறுதியாக இருப்பவர்.
சூர்யா - ஹரி கூட்டணியில் யானை
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் தற்போது ‘என்.ஜி.கே.’ படம் தயாராகி வருகிறது. இந்த படத்தில் ஷூட்டிங் அனைத்தும் நிறைவடைந்துவிட்டது. இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்துரகுல் ப்ரீத்சிங் மற்றும் சாய் பல்லவி நடித்துள்ளனர்.
அதே சபயம், என்.ஜி.கே படத்தைத் தொடர்ந்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ‘காப்பான்’ படத்தின் ஷூட்டிங் வேலைகள் நடிந்துக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் சயிஷா சைகல் ஹீரோயினாக நடிக்கிறார். ‘காப்பான்’ படத்திற்கு பிறகு சுதா கொங்கரா இயக்கும் படத்திலும் சூர்யா நடிக்க இருக்கிறார்.
இந்நிலையில் ஆறு, வேல், சிங்கம், சிங்கம் 2 மற்றும் சிங்கம் 3 என ஹரி இயக்கத்தில் 5 படங்களில் நடித்திருந்தார் நடிகர் சூர்யா. தற்போது இதே கூட்டணியில் மீண்டும் ஒரு புதிய படம் உருவாக இருக்கிறது.
இயக்குனர் ஹரியுடன் ஏற்கனவே நடித்த ஐந்து படங்களும் வெற்றி பெற்றுள்ள நிலையில், தற்போது மீண்டும் ஆறாவது முறையாக யானை என்ற படத்தில் ஹீரோவாக நடிக்க இருக்கிறார்.
முன்னதாக இதே போல் விலங்கு பெயர் வைத்து சிங்கம் என எடுத்த படம் 3 பாகங்களாக உருவாகி பெறும் வெற்றியை பெற்றுத்தந்தது. ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா என்ற வசனமெல்லாம் இன்றளவும் பலரும் பேசி வருகிறார்கள். ஹரி படம் என்றாலே பஞ்ச் டயலாக் தான். எனவே சூர்யா ரசிகர்கள் எல்லோரும் இந்த படத்தில் என்ன வசனம் இருக்கும் என்ற ஆர்வத்தில் இருக்கின்றனர்.