Advertisment
Presenting Partner
Desktop GIF

சூர்யா மும்பையில் செட்டில் ஆகலையாம்... குழந்தைங்க 2 பேரும் அங்க படிக்கிறாங்க!

மும்பையில் செட்டில் ஆகவில்லை, தனது மகன் மற்றும் மகள் ஆகியோர் படிப்பிற்காக அங்கே இருக்கிறார்கள் – நடிகர் சூர்யா

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Bala rejected Jyothika in Pitamaga

நடிகர் சூர்யா

நடிகர் சூர்யா தனது மனைவி ஜோதிகா, மகள் தியா, மகன் தேவ் ஆகியோருடன் மும்பையில் குடியேறி இருப்பதாக கூறப்பட்ட நிலையில் சூர்யா தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

Advertisment

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான சூர்யா, அவரது நடிப்புத் திறமை மற்றும் கலையின் மீதான அர்ப்பணிப்புக்காக மிகவும் மதிக்கப்படுகிறார். 'நந்தா', 'மௌனம் பேசியதே', 'பிதாமகன்', 'பேரழகன்', 'கஜினி', 'அயன்', 'மாயாவி' மற்றும் 'ஜெய் பீம்' போன்ற படங்களில் அவர் நடித்த பல்வேறு கதாபாத்திரங்கள் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களால் விரும்பப்பட்டது. எல்லாவற்றுக்கும் மேலாக சுதா கொங்கராவின் 'சூரரைப் போற்று' படத்திற்காக சூர்யா சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றார்.

இதையும் படியுங்கள்: சமூகத்தை இணைக்கிற மாதிரி காட்சி அமைப்புகளுடன் ஒரு படம் கூட வரவில்லை – தங்கர் பச்சான்

சூர்யா தற்போது சிவா இயக்கத்தில் ‘கங்குவா’ படத்தில் நடித்து வருகிறார். ஸ்டுடியோ கிரீன் சார்பாக பிரமாண்டமாக தயாராகி வரும் இந்தப் படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். பாலிவுட் நடிகை திஷா பதானி இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும் தனது சூர்யா தனது 2டி எண்டர்டெயின்மென்ட் சார்பாக தயாரிக்கவிருக்கும் படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் நடிகர் சூர்யா தனது மனைவி ஜோதிகா, மகள் தியா, மகன் தேவ் ஆகியோருடன் மும்பையில் குடியேறி இருப்பதாக கூறப்பட்டது. மும்பையில் தங்கி இருக்கும் சூர்யாவின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. அப்போது தனது குழந்தைகளை புகைப்படம் எடுக்க வேண்டாம் என பத்திரிகையாளர்களிடம் கோரிக்கை விடுத்தது இணையத்தில் வைரலாக பரவியது.

நடிகர் சூர்யா மும்பையில் ரூ.70 கோடி மதிப்பில் சொந்த வீடு வாங்கியதாகவும், மகளின் மேற்படிப்புக்காக இந்த வீடு வாங்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. மேலும், நடிகர் சூர்யா மும்பையிலே குடியேறிவிட்டதாகவும் தகவல்கள் வெளியானது.

இந்நிலையில், ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் சூர்யா, சோசியல் மீடியாவில் நான் மும்பையில் செட்டில் ஆகிவிட்டேன் என்று சொல்றாங்க. அப்படியெல்லாம் ஒண்ணும் இல்ல. இரண்டு குழந்தைகளும் மும்பையில படிக்கிறாங்க. அவங்கள பார்க்குறதுக்காகத்தான் அப்பப்ப அங்க போய்ட்டு வர்றேன். மற்ற படி நான் சென்னையில தான் இருக்கேன் என்று கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema Surya
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment