scorecardresearch

கமலின் விக்ரம் படத்தில் இணைந்த நடிகர் சூர்யா? உச்சம் தொட்ட எதிர்பார்ப்பு

Tamil Cinema Update : விக்ரம் படத்தின் பாடல் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது.

கமலின் விக்ரம் படத்தில் இணைந்த நடிகர் சூர்யா? உச்சம் தொட்ட எதிர்பார்ப்பு

Actor Surya Join With Kamal Vikram Movie On Guest Role : கடந்த 2018-ம் ஆண்டு வெளியான விஸ்வரூபம் படத்திற்கு பிறகு படங்களில் நடிக்காமல் அரசியல் பிரவேசத்தில் ஈடுபட்டிருந்த நடிகர் கமல்ஹாசன். தற்போது 4 ஆண்டு இடைவெளிக்கு பிறகு நடித்துள்ள படம் விக்ரம்.

மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதி, பகத் ஃபாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம் ஷிவானி நாராயணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.  

அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை நடிகர் கமல்ஹாசன் தனது ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் மற்றும் டர்மெரிக் மீடியா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த படம் வரும் ஜூன் 3-ந் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்திற்காக கமல்ஹாசன் எழுதி பாடியுள்ள பத்தல பத்தல என்ற பாடல் நேற்று இரவு 7 மணிக்கு வெளியிடப்பட்டது.

நடிகர் கமல்ஹாசன் பல வருடங்களுக்கு பிறகு குத்து நடனம் ஆடியுள்ள இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், வரும் மே 15-ந் தேதி விக்ரம் படத்தின் பாடல் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. இதனால் கமல் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்

இந்நிலையில், விக்ரம் படத்தில் நடிகர் சூர்யா கெஸ்ரோலில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் 15-ந் தேதி நடைபெறும் இசைவெளியீட்டு விழாவில் ஜெய்பீம் ஹீரோ தோன்றுவார் என்றும் தகவல்கள் வெளியாகி வருகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுவதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Actor surya join with kamal vikram movie on guest role