/indian-express-tamil/media/media_files/jLwpkEmCWhrYD7u4cUln.jpg)
நடிகர் சூர்யா-ஜோதிகாவின் மூத்த மகள் தியாவின் 12ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் வெளியாகி உள்ளது.
actor surya daughter diya 12th Result | நடிகர் சூர்யாவும், ஜோதிகாவும் பூவெல்லாம் கேட்டுப்பார் என்ற திரைப்படத்தில் நடிக்கும்போது காதலிக்க தொடங்கினர்.
தொடர்ந்து, இருவரும் காக்க காக்க, உயிரிலே கலந்தது, பேரழகன், சில்லுனு ஒரு காதல், மாயாவி என 7 படத்துக்கும் மேல் நடித்தனர்.
இவர்களின் திருமணம் 2008ஆம் ஆண்டு நடந்தது. இந்த ஜோடிக்கு 17 வயதில் தியா என்ற பெண் குழந்தையும், 15 வயதில் தேவ் என்ற மகனும் உள்ளனர்.
இந்த நிலையில் சூர்யாவின் மகள் தியா 12ஆம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார். இந்தத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், அவரது மதிப்பெண்கள் பரவலாக பேசப்பட்டுவருகிறது.
தியா பெற்ற மதிப்பெண்கள்
எண் | பாடம் | மொத்த மதிப்பெண் | பெற்ற மதிப்பெண் |
01 | தமிழ் | 100 | 96 |
02 | ஆங்கிலம் | 100 | 97 |
03 | கணக்கு | 100 | 94 |
04 | இயற்பியல் | 100 | 99 |
05 | வேதியியல் | 100 | 98 |
06 | கம்ப்யூட்டர் சயின்ஸ் | 100 | 97 |
12ஆம் வகுப்பில் தியா நல்ல மதிப்பெண் பெற்றுள்ளது அவர்களின் குடும்பத்தை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. தியா 10ஆம் வகுப்பு தேர்வில் 500க்கு 487 மதிப்பெண்கள் எடுத்து இருந்தார்.
நடிகர் சூர்யா ஜோதிகா ஜோடி தற்போது மும்பையில் செட்டி் ஆகி விட்டனர் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், தியாவின் 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் வைரலாகி வருகின்றன. எனினும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னமும் வெளியாகவில்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.