பாட்ஷா, கஜினி ரெப்ரன்ஸ்... ஆக்ஷன், அதிரடி காட்டும் சூர்யா: 'கருப்பு' டீசர் எப்படி?
சூர்யா – த்ரிஷா சில ஆண்டுகள் இடைவெளிக்கு பின் மீண்டும் இணைந்துள்ள இந்த படத்தில் கருடன் ஷிவிதா, லப்பர் பந்து சுவாசிகா, மலையாள நடிகர் இந்திரன்ஸ், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சூர்யா – த்ரிஷா சில ஆண்டுகள் இடைவெளிக்கு பின் மீண்டும் இணைந்துள்ள இந்த படத்தில் கருடன் ஷிவிதா, லப்பர் பந்து சுவாசிகா, மலையாள நடிகர் இந்திரன்ஸ், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
நடிகர் சூர்யா இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில், அவரது நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள கருப்பு படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் அமைந்துள்ள இந்த டீசர் தற்போது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.
Advertisment
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் சூர்யா. நேருக்கு நேர் படம் தொடங்கி பல இயக்குனர்களுடன் இணைந்து வெற்றிப்படங்களை கொடுத்து வரும் சூர்யா சமீப காலமாக இளம் இயக்குனர்கள் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் வெளியான ரெட்ரோ படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருந்தார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது.
முன்னதாக சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்ற படத்தில் நடித்திருந்தார். பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான கங்குவா திரைப்படம் வசூலில் பெரிய வீழ்ச்சியை சந்தித்தாலும், அடுத்தடுத்து படங்களில் நடித்து வெற்றிப்பாதைக்கு திரும்ப ஆயத்தமாகி வரும் சூர்யா அடுத்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கருப்பு என்ற படத்தில் நடித்துள்ளார். த்ரிஷா நாயகியாக நடித்துள்ள இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த படத்தை தொடர்ந்து அடுத்து தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடித்து வரும் சூர்யா, இன்று தனது 50-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு, இன்று காலை முதலே அவருக்கு வலைதளங்களில் ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், சூர்யாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்ல அவரது வீட்டின் முன்பு ரசிகர்கள் குவிந்துள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல்லாகி வருகிறது.
Advertisment
Advertisements
இந்நிலையில், ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கருப்பு படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு, இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. சூர்யா – த்ரிஷா சில ஆண்டுகள் இடைவெளிக்கு பின் மீண்டும் இணைந்துள்ள இந்த படத்தில் கருடன் ஷிவிதா, லப்பர் பந்து சுவாசிகா, மலையாள நடிகர் இந்திரன்ஸ், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சாய் அபயங்கர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் இருக்குமு் இந்த டீசர் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், பாட்ஷா படத்தில் வரும் பவர்ஃபுல் வசனமான எனக்கு இன்னொரு பெயர் இருக்கு என்ற வசத்தை சூர்யா பேசுகிறார். அதேபோல் அவரின் கஜினி படத்தில் தர்பூசணி சாப்பிடும் காட்சியை இந்த படத்தில் ரீக்ரியேட் செய்துள்ளனர். தெறி படத்தில் மகேந்திரனின் காதுக்கு அருகே விஜய் பேசுவது போன்று இந்த டீசரில் சூர்ய வில்லனிடம் காதுக்கு அருகே, பேபி டாடிஸ் ஹோம் என்று சொல்கிறார்.
இந்த டீசரின் பல இடங்களில் விருமன் படத்தில் வரும் கார்த்தியை பார்த்தது போலவே இருக்கிறது. ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன் ஆகிய படங்களுக்கு பிறகு, சூர்யா இந்த படத்திலும் வழக்கறிஞராக நடித்துள்ளார். அதேபோல் இந்த டீசர் முழுவதும் கறுப்பு மற்றும் வெள்ளை உடையில் தான் சூர்யா தோன்றியுள்ளார். டீசருக்கான பின்னணி இசை அனிருத்தை நினைவூட்டுகிறது.