தமிழ் சினிமாவில் நட்சத்திர தம்பதியாக வலம் வரும் ஜோடி சூர்யா – ஜோதிகா. 1997-ம் ஆண்டு வெளியான நேருக்கு நேர் படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமான சூர்யா, பூவெல்லாம் கேட்டுப்பார், உயிரிலே கலந்தது உள்ளிட்ட படங்களில் ஜோதிகாவுடன் இணைந்து நடித்துள்ளார்.
தொடர்ந்து காக்க காக்க மாயாவி உள்ளிட்ட படங்களில் ஜோதிகாவுடன் இணைந்து நடித்த சூர்யா கடந்த 2006-ம் ஆண்டு ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அதன்பிறகு சில்லுனு ஒரு காதல் படத்தில் இருவரும் இணைந்து நடித்த நிலையில், அதன்பிறகு ஒரு சில படங்களில் நடித்திருந்த ஜோதிகா 2009-ம் ஆண்டு நடிப்பில் இருந்து விலகினார்.
அதன்பிறகு 6 வருட இடைவெளிக்கு பின் 2015-ம் ஆண்டு வெளியான 36 வயதினிலே படத்தின் மூலம் ரீ-என்டரி ஆன ஜோதிகா தற்போது பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில், சூர்யா ஜோதிகா இருவரும் காதலிக்கும்போதே ஜோதிகா தனக்கு பாதுகாப்பாக இருந்தார் என்று சூர்யாவின் தங்கை ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
பழம்பெரும் நடிகர் சிவக்குமாரின் மகனாக திரைத்துறையில் அறிமுகமாகி இருந்தாலும், சூர்யா தற்போது தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார். அதேபோல் அவரது சகோதரரும் நடிகருமான கார்த்தியும் பருத்தி வீரன் படத்தின் மூலம் தனக்கென ரசிகர்களை உருவாக்கி வைத்துள்ளர். இவர்கள் இருவருக்கும் பிருந்தா என்ற ஒரு தங்கை உள்ளார்.
அவர் குறித்து பலருக்கும் தெரியாத நிலையில், நேர்காணல் ஒன்றில் பேசிய பிருந்தா சிவக்குமார் தனது அண்ணன்கள் குறித்து அண்ணியார்கள் குறித்து பேசியுள்ளார். இதில் சூர்யா ஜோதிகா குறித்து பேசிய அவர். அவர்கள் இருவரும் காதலிப்பது திருமணத்திற்கு முன்பே எனக்கு தெரியும். ஒருமுறை ஹைதராபாத்தில் அவார்டு பங்ஷன் ஒன்றிற்கு சென்றிருந்தபோது ஜோதிகா எனது அண்ணன் சூர்யா இருவருக்கும் இடையில் நான் அமர்ந்திருந்தேன்.
அப்போது கூட்டத்தில் நான் சிக்கிவிட கூடாது என்று ஜோதிகா அண்ணி (அப்போது கல்யாணம் ஆகவில்லை) என் கையை பிடித்துக்கொண்டு பாதுகாப்பாக அழைத்துச்சென்றார். அவர் திருமணத்திற்கு முன்பே என்னை பாசத்தோடு பாதுகாத்தவர் என்று கூறியுள்ளார். அதேபோல் சின்ன அண்ணன் கார்த்தி எனக்கு டுவின் பிரதர் மாதிரி எப்போதும் எதைப்பற்றி வேண்டுமானாலும் பேசிக்கொண்டிருப்போம் என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“