கங்குவா படம் புரொமோஷன் நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்களிடம் பேசிய நடிகர் சூர்யா, “பாய்ஸ் & கேர்ல்ஸ், நல்ல பசங்களுக்கு நல்ல பொண்ணுங்க கிடைப்பாங்க. நல்ல பொண்ணுங்களுக்கு நல்ல பசங்க கிடைப்பாங்க. வாழ்க்கையில் பார்க்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கிறது” என்று பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இயக்குநர் `சிறுத்தை' சிவா இயக்கத்தில், சூர்யா நடிப்பில் `கங்குவா' திரைப்படம் மிகப் பிரமாண்டமான பொருள்செலவில் வரலாற்றுப் புனைவாக உருவாகியுள்ளது. 'கங்குவா' திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட 10 மொழிகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் நடிகர் சூர்யாவுடன் திஷா பதானி, பாபி தியோல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
வரலாற்றுப் புனைவாக உருவாகியுள்ள கங்குவா திரைப்படம் நவம்பர் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், கங்குவா படக்குழுவினர் புரொமோஷன் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் சூர்யா டெல்லியில் கல்லூரி மாணவர்கள் மத்தியில் ஒரு நிகழ்ச்சியில் பேசினார். “பாய்ஸ் & கேர்ல்ஸ், நல்ல பசங்களுக்கு நல்ல பொண்ணுங்க கிடைப்பாங்க. நல்ல பொண்ணுங்களுக்கு நல்ல பசங்க கிடைப்பாங்க.” என்று டெல்லி மாணவர்களுடனான சூர்யாவின் உடையாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் மாணவர்களிடம் பேசிய நடிகர் சூர்யா, “பாய்ஸ் & கர்ல்ஸ் , நல்ல பசங்களுக்கு நல்ல பொண்ணுங்க கிடைப்பாங்க. நல்ல பொண்ணுங்களுக்கு நல்ல பசங்க கிடைப்பாங்க. வாழ்க்கையில் பார்க்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கிறது. உங்கள் குடும்பம், நட்பு மற்றும் உங்கள் நம்பிக்கைகளை எப்போதும் விட்டுக்கொடுக்காதீர்கள்.
எது வேண்டுமானாலும் நடக்கலாம். நீங்கள் ஆசைப்படும் எல்லாமே நடந்துவிடாது. ஆனால், உங்களுக்கு தேவையான எல்லா விஷயங்களும் நடக்கும். 'லைஃப் இஸ் பியூட்டிஃபுல்” என்று பேசியுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில், நடிகர் சூர்யாவுடன் கங்குவா திரைப்படத்தின் கதாநாயகி திஷா பதானி, பாபி தியோல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
“நல்ல பசங்களுக்கு நல்ல பொண்ணுங்க கிடைப்பாங்க. நல்ல பொண்ணுங்களுக்கு நல்ல பசங்க கிடைப்பாங்க.” என்ற சூர்யாவின் பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“