நடிகர் சூர்யாவின் தங்கை பிருந்தா சிவக்குமார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் அழகாக பாடல் பாடிய வீடியோ வைரலாகி வருகிறது. சூர்யா தங்கை இவ்ளோ அழகான பாடகியா என்று பலரும் வியப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
நடிகர் சிவக்குமாரின் மகன்கள் சூரியா, கார்த்திக் இருவரும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருகின்றனர். சூர்யா சூரரைப் போற்று, ஜெய்பீம் போன்ற படங்களில் நடித்து உலக அளவில் ரசிகர்களை ஈர்த்து இருக்கிறார். சூர்யா மற்றும் அவருடைய மனைவி நடிகை ஜோதிகா 2டி எண்டெர்டெயின்மெண்ட் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தொடர்ந்து படங்களைத் தயாரித்து வருகின்றனர். நடிகர் சிவக்குமாரின் ஒரு கலைக்குடும்பமாகவே பார்க்கப்படுகிறது.
பலரும்க்கும் சிவக்குமாரின் மகன்கள் சூர்யா, கார்த்திக் தெரிந்த அளவுக்கு அவருடைய மகள் பிருந்தா சிவக்குமார் பற்றி அதிகம் தெரியாது.
இந்நிலையில் பிருந்தா சிவக்குமார் பிஹைண்ட்வுட்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், சிவக்குமார் நடித்த ஆனந்தராகம் படத்தில் இடம்பெற்ற ‘ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ’ என்ற பாடலை மிகவும் அழகாக பாடிக் காட்டியுள்ளார். பிருந்தா பாடுவதைப் பார்த்து பலரும், நடிகர் சூர்யாவின் தங்கை பிருந்தா சிவக்குமார் இவ்வளவு அழகான பாடகியா என்று வியப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
நடிகர் சூர்யாவின் தங்கை பிருந்தா சிவக்குமார் அழகாக பாடிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“