/indian-express-tamil/media/media_files/FLhpqXqPqAKsBKKqRVag.jpg)
நடிகர் அஜித் ரூ.9 கோடி மதிப்பிலான பெராரி ரேஸ் காரை வாங்கியதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களுள் ஒருவரான அஜித் குமார் துபாயில் பெராரி கார் ஒன்றை வாங்கியாக கூறப்படுகிறது. இந்தக் காரின் எடை 1,670 கிலோ என்றும் விலை ரூ.9 கோடி என்றும் கூறப்படுகிறது.
இதற்கிடையில், நடிகர் அஜித் தனது சிவப்பு நிற ஃபெராரி SF90 Stradale உடன் இருக்கும் படங்கள் பல்வேறு சமூக ஊடக தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. நடிகர் இந்த காரை இந்தியாவில் அல்ல, துபாயில் வாங்கியதாக தெரிகிறது. இந்த ஸ்போர்ட்ஸ் கார் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு கிடைக்கிறது, ஆனால் நடிகர் அதை துபாயில் வாங்க முடிவு செய்ததாக தெரிகிறது.
ஃபெராரி SF90 Stradale, எந்த சந்தேகமும் இல்லாமல், சிறந்த தோற்றமுடைய சூப்பர் கார்களில் ஒன்றாகும். இந்த காரின் வடிவமைப்பு மிகவும் தனித்துவமானது.
எஞ்சின் மட்டும் அதிகபட்சமாக 780 பிஎஸ் பவரை உருவாக்குகிறது. இது ஒரு பிளக்-இன் ஹைப்ரிட் என்பதால், SF90 மூன்று மின்சார மோட்டார்களைப் பெறுகிறது. மின்சார மோட்டார்கள் 220 பிஎஸ் உற்பத்தி செய்கிறது.
மேலும், கார் அதிகபட்சமாக 1,000 பிஎஸ் மற்றும் 800 என்எம் பீக் டார்க்கை உருவாக்குகிறது. இந்த எஞ்சின் 8-ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.
மற்ற கார்களைப் போல, ஃபெராரி SF90 ரிவர்ஸ் கியர் உடன் வரவில்லை. காரை பின்னோக்கி நகர்த்துவதற்கு முன்பக்கத்தில் உள்ள மின்சார மோட்டார்களில் ஒன்றைப் பயன்படுத்துகிறது. ஃபெராரி SF90 Stradale 7.9 kWh பேட்டரியைப் பயன்படுத்துகிறது, இது 26 கிமீ வரம்பை வழங்குகிறது.
நடிகர்கள் விலை உயர்ந்த கார், பைக்குகள் வாங்குவது புதிதல்ல. ஆனால் அஜித் தீவிர கார் பிரியர் ஆவார். இவரிடம் ஏற்கனவே பல்வேறு கார்கள் உள்ளன எனக் கூறப்படுகிறது. இந்தியாவில் புத்தம் புதிய Ferrari SF90 Stradale கார்களின் விலை சுமார் 7.90 கோடியில் இருந்து தொடங்குகிறது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.