நடிகர் தவசி மரணம், திரை உலகினர் இரங்கல்

புற்றுநோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் தவசி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

புற்றுநோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் தவசி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

நடிகர் தவசி, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், கொம்பன் என பல படங்களில் நடித்துள்ளார். இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் அண்ணாத்த படத்திலும் தவசி நடித்துள்ளார்.

 

சில, தினங்களுக்கு முன் தனது சிகிச்சைக்கு  போதிய பணமின்றி தவித்து வருவதாகவும் ரசிகர்களும்  திரை உலகினரும் உதவ முன்வர வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார். மேலும், பெரிய மீசை தாடியுடன்  கம்பீரமாக இருந்த தவசி வீடியோவில், புற்றுநோய் பாதிப்பால் மொட்டை அடிக்கப்பட்டு எலும்பும் தோலுமாக இருநத்தை கண்டு ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

நடிகர் சிவகார்த்திகேயன், சூரி நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சூரிக்கு தந்தையாக நடித்தவர் தவசி, கத்தையான பெரிய மீசை தாடியுடன் அவருடைய கம்பீரமான தோற்றம் சினிமா ரசிகர்களைன் பட்டென பதிந்துவிட்டது. அதிலும், அந்தப் படத்தில், அவர் கருப்பன் குசும்புக்காரன் என்று பேசிய வசனம் சினிமா ரசிகர்களால் மறக்க முடியாத ஒன்று.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Actor thavasi who was undergoing treatment for cancer passed away

Next Story
கீர்த்திக்கும் செல்வத்துக்கும் திருமண ஏற்பாடு: என்ன செய்வாள் பூவரசி?Tamil Serial News, Sun TV Poove Unakkaga
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com