/indian-express-tamil/media/media_files/2025/09/07/screenshot-2025-09-07-130627-2025-09-07-13-06-43.jpg)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜயகாந்த். சமகாலங்களில் ரஜினி, கமல் என இருபெரும் இமயங்கள் தமிழ் சினிமாவை ஆண்டு கொண்டிருந்த காலத்தில் அவர்களுக்கு இணையான இடத்தைப் பிடித்தவர் விஜயகாந்த். இவரின் படங்களில் சண்டைகளுக்கு பஞ்சம் இருக்காது. அதிரடி காட்சிகளில் நடிப்பது இவருக்கு அல்வா சாப்பிடுவது போல. எந்தவித டூப் போடாமல் ரிஸ்க்கான சண்டைக் காட்சிகளில் அசால்டாக நடிப்பார்.
அதுமட்டுமின்றி மற்றவருக்கு உதவி என்று வரும்போது அது என்னவாக இருந்தாலும் ஓடி வந்து முன் நின்று அதை செய்து கொடுக்கும் மாமனிதன். அப்படிப்பட்ட மாமனிதன் தான் திரைப்பட கல்லூரி மாணவர்களை வளர்த்து விட்டார் என்பதை யாராலும் மறுக்க முடியாது. அது மட்டுமின்றி தன்னுடன் நெருங்கி பழகுபவர்களை தன்னால் முடிந்த உதவிகளை செய்து கொடுத்து அவர்களை தூக்கி விடுவார். அப்படி சின்ன கவுண்டர் படத்தில் வடிவேலுவை ஒரு நல்ல கதாபாத்திரம் கொடுத்து அவரை வளர்த்து விட்டார்.
அதுவரை கவுண்டமணி உடன் பின்னாடி நின்று துணை கதாபாத்திரமாக நடித்துக் கொண்டிருந்த வடிவேலுவை சின்ன கவுண்டர் படத்தில் சோலோ பர்பாமன்ஸ் செய்ய வைத்து அழகு பார்த்தவர் விஜயகாந்த். அதன் பின் வடிவேலு தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத உச்சம் தொட்ட காமெடி நடிகராக உருவாகினார். விஜயகாந்த் உடன் பல படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வடிவேலு கலக்கி இருப்பார். அதிலும் ”எங்கள் அண்ணா” படத்தில் இவர் செய்த அலப்பறை இன்றும் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும்.
ஒரு காலகட்டத்தில் பெரிய நடிகராக வளர்ந்த வடிவேலு விஜயகாந்தின் வீட்டின் அருகிலேயே குடியேறினார். திடீரென்று ஒரு நாள் விஜயகாந்திற்க்கும் வடிவேலுக்கும் மோதல் ஏற்பட்டது. இதனால் வடிவேலு பல விமர்சனங்களுக்கு ஆளானார்.
இதை பற்றி நடிகர் தியாகு பேசுகையில், " வடிவேலு எனக்கு போன் செய்தார். போனில் விஜயகாந்த் என்னை அடித்துவிட்டார் என்று கூறினார். நான் உடனே என்ன செய்வதென்று தெரியாமல் கலைஞருக்கு அந்த நேரத்தில் போன் செய்தேன். அவர் என்ன தியாகு என்று கேட்டார். நான் உடனே வடிவேலுவை போட்டு அடிக்கிறார்களாம், கொஞ்சம் காப்பாற்றுங்கள் என்று கூறினேன். அதற்க்கு பிறகு ஸ்டாலின் அவரகள் எனக்கு போன் செய்து ஏன் அப்பாவை எழுப்பினீர்கள், என்னிடம் சொல்லியிருக்கலாமே என்று கூறினார். யாரிடம் சொன்னால் என்ன ஒருவர் உதவி கேட்கிறார். காப்பாற்ற வேண்டியாயது நம்முடைய கடமை தானே. சின்ன கவுண்டர் படத்தில் விஜயகாந்திற்கு வெறும் காய் கால் அமுக்கிவிட்டதற்கு ரூ.250 சம்பளம் ஒரு நாளைக்கு. அதனால் என்றைக்கும் காசு வந்தால் பழசை மரணிக்கவே கூடாது. அப்படி மறந்தால் அதற்க்கு பெயர் துரோகம்." என்று கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.