New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/09/52816975_2026015004182260_690093573932056576_o.jpg)
actor vadivel balaji passed away due to ill health : விஜய் டிவியில் புகழ்பெற்ற வடிவேல் பாலாஜி தன்னுடைய எதார்த்தமான நகைச்சுவை உணர்வால் அனைவரையும் கொள்ளையடித்தவர். உடல்நிலக்குறைவு காரணமாக இன்று அவர் காலமானார். கலக்கப்போவது யாரு, அது இது எது போன்ற நிகழ்ச்சிகளில் இவரின் ஒவ்வொரு செய்கையும் அனைவரையும் சிரிக்க வைத்துக் கொண்டே இருக்கும். அதே போன்று கவுண்ட்டர் காமெடியிலும் இவரை அடித்துக் கொள்ள ஆளே இல்லை என்று தான் கூற முடியும்.
Advertisment
மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 42 வயதாகும் வடிவேல் பாலாஜிக்கு 15 நாட்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவருக்கு முடக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. பின்பு அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் தொடர்ந்து சிகிச்சை மேற்கொள்ள அவருக்கு வசதி இல்லாத காரணத்தால் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் வடிவேல் பாலாஜி இன்று உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இவருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
???? #RIPVadivelBalajipic.twitter.com/5D3hgsiimr
— Vijay Television (@vijaytelevision) September 10, 2020
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.