Appatha First Song From Vadivelu Naai Sekar Returns Movie : நீண்ட இடைவெளிக்கு பிறகு வடிவேலு நாயகனாக நடித்து வரும் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் முதல் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நட்சத்திரமாக வலம் வருபவர் வடிவேலு. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும்படியாக அமைந்துள்ள இவரது காமெடி காட்சிகளுக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம். காமெடி மட்டுமல்லாது முக்கியத்துவம் வாய்ந்த குணச்சித்திர வேடங்களிலும் கலக்கியுள்ள வடிவேலு சில படங்களில் நாயகனாகவும் நடித்துள்ளார்.
அந்த வகையில் இவர் நாயகனாக நடித்து வெளியான, இம்சை அரசன் 23-ம் புலிகேசி படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத்தொடர்ந்து இந்திரலோகத்தில் நா. அழகப்பன், எலி, தெனாலி ராமன் உள்ளிட்ட சில படங்களில் நாயகனாக நடித்திருந்தார். அதேபோல் முக்கிய நடிகர்களின் படங்களில் காமெடியனாகவும் நடித்து வந்த வடிவேலு
அந்த வகையில் இம்சை அரசன் படத்தின் 2-ம் பாகத்தில் அவர் நாயகனாக நடித்து வந்தபோது அப்படத்தின் தயாரிப்பாளர் இயக்குனர் ஷங்கருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஷங்கர் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தார். அதனைத்தொடர்ந்து வடிவேலுக்கு ரெட் கார்டு விதிக்கப்பட்ட நிலையில், தற்போது தடையில் இருந்து மீண்டு படங்களில் நடித்து வருகிறார்.

இதில் முதல் படமாக லைகா நிறுவனம் தயாரிப்பில் இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்தில் வடிவேலு நாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ள நிலையில், தற்போது படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. எங்க அப்பத்தா ஷைடைப் என்று தொடங்கும் இந்த பாடலை வடிவேலுவே பாடியுள்ளார்.
சுராஜ் இயக்கி வரும் இந்த படத்தில் வடிவேலுவுடன், குக் வித்கோமாளி பிரபலம் சிவாங்கி,
Surprise 🥳🎊 Why restrict with just lyric video when we can treat our fans with full VIDEO SONG 🕺🏻
— Lyca Productions (@LycaProductions) November 14, 2022
▶️ https://t.co/dhMZYfGGrk
Vaigai Puyal #Vadivelu 🌪️ in a @PDdancing choreography 🕺🏻 The combo which entertained us over the years is back with #Appatha 👵🏼#NaaiSekarReturns 🐶 pic.twitter.com/qGm44lQeG0
இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் வடிவேலு குரலை கேட்டாலே ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும் என்று தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும வடிவேலுவை மீண்டும் சினிமாவிற்கு கொண்டு வந்த லைகா நிறுவனத்திற்கு நன்றியும் கூறியுள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil