Advertisment

வடிவேலு வீட்டில் சோகம்… தாயார் இறந்த 7 மாதத்தில் தம்பியும் மரணம்!

நடிகர் வடிவேலுவின் உடன் பிறந்த தம்பியான ஜெகதீசன் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

author-image
WebDesk
Aug 28, 2023 17:40 IST
New Update
Actor vadivelu younger brother passed away Tamil News

வடிவேலுவைப் போலவே சினிமாவில் வாய்ப்பு தேடிய ஜெகதீசன் ‘மலைக்கோவில் தீபம்’, ‘காதல் அழிவதில்லை’ உள்ளிட்ட ஒரு சில படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் நடிகர் வடிவேலு. நடிகர், பாடகர் என பல திறமைகளை கொண்ட அவரின் நடிப்பில் கடைசியாக வெளியாகி 'மாமன்னன்' படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது வடிவேலு சந்திரமுகி 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.

Advertisment

இந்நிலையில், நடிகர் வடிவேலுவின் உடன் பிறந்த தம்பியான ஜெகதீசன் இன்று காலமானார். அவருக்கு வயது 55. கல்லீரல் செயலிழந்ததன் காரணமாக கடந்த சில தினங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். வடிவேலுவைப் போலவே சினிமாவில் வாய்ப்பு தேடிய ஜெகதீசன் ‘மலைக்கோவில் தீபம்’, ‘காதல் அழிவதில்லை’ உள்ளிட்ட ஒரு சில படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் மதுரையில் ஜவுளி வியாபாரம் செய்து வந்தார்.

இந்நிலையில், ஜெகதீசன் கல்லீரல் பாதிப்பால் கடந்த சில மாதங்களாக அவதிப்பட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. இதற்காக சிகிச்சை எடுத்து வந்த அவர், இன்று விரகனூரில் உள்ள அவரது வீட்டில் உயிரிழந்தார். தம்பியின் மரணத்தால் வடிவேலு உள்பட அவரது குடும்பத்தினரே சோகத்தில் மூழ்கி உள்ளனர். ஏற்கனவே வடிவேலுவின் தாயார் சரோஜினி வயது முதிர்வு காரணமாக கடந்த ஜனவரி மாதம் காலமானார். இப்படியான சூழலில் தம்பியும் மரணமடைந்துள்ளது குடும்பத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம்ஆப்பில்பெற https://t.me/ietamil

#Entertainment News Tamil #Vadivelu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment