‘சஞ்சீவுக்கும் எனக்கும் உறவுமுறை…’ ஸ்வீட் ஷாக் கொடுத்த வனிதா

Vanitha Sanjeev Relationship : நடிகை வனிதா நடிகர் சஞ்சீவை தனது சகோதரர் என்று குறிப்பிட்டு வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது

தமிழ் திரையுலகில் தற்போது வைரல் நாயகியாக வலம் வருபவர் வனிதா விஜயகுமார். கடந்த சில நாட்களாக இவர் செய்யும் சிறு செயலையும் ரசகர்கள் பெரும் வைரலாக்கி வருகின்றனர். மேலும் வனிதாவின் மூன்று திருணமங்கள், சமீபத்தில் அவர் 4-வது திருமணம் செய்ததாக வெளியான வதந்தி என பல சர்ச்சைகளை கடந்து வந்துள்ள வனிதா தற்போது தமிழில் சில படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் கவனம் செலுத்தி வரும் வனிதா அவ்வப்போது தான் செல்லும் நிகழ்ச்சிகளின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் வனிதா நடிகர் சஞ்சீவுடன் இருக்கிறார். மேலும் சஞ்சீவ் தனது சகோதரர் என்று அந்த புகைப்படத்தின் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சஞ்சீவ் எப்படி உங்களுக்கு சகோதரர் ஆவார் என்று கேள்வி எழுப்பியுள்ளனர். இது குறித்து விளக்கம் அளித்துள்ள வனிதா, தனது அம்மா மஞ்சுளாவின் சகோதரி ஷியாமளாவின் மகன் தான் சஞ்சீவ். அதனால் தான் அவர் எனது சகோதரர் என குறிப்பிட்டு இருக்கிறார். அவர்கள் இதனை பார்த்த ரசிகர்கள் இவ்வளவு நெருக்கமான உறவினர்களா என ரசிகர்கள் ஆச்சர்யம் அடைந்து இருக்கிறார்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Actor vanitha vijayakumar and actor sanjeev relactionship update

Next Story
Sembaruthi Serial : மேத்தாவை சிக்க வைத்த ஆதி : லாபமாக கிடைத்தது 2 கோடி
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com