நடித்தது 69 படங்கள்; 12 படங்களில் தன் சொந்த பெயரில் நடித்த விஜய்; எந்தெந்த படம் தெரியுமா?

தளபதி விஜயின் படம் என்றாலே திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் திருவிழா போன்று அலைமோதும். அவர் திரைப்படங்களில் தன் சொந்த பெயருடன் நடித்த 12 படங்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

தளபதி விஜயின் படம் என்றாலே திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் திருவிழா போன்று அலைமோதும். அவர் திரைப்படங்களில் தன் சொந்த பெயருடன் நடித்த 12 படங்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

author-image
WebDesk
New Update
download (15)

தமிழ் சினிமா உலகில் இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்பவர் தளபதி விஜய். தளபதி விஜயின் படம் என்றாலே திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் திருவிழா போன்று அலைமோதும்.

Advertisment

ரசிகர்களின் விஜய் படம் என்றாலே சூப்பர் ஹிட் தான். அந்த அளவிற்கு அவருடைய படத்தின் கதைகளமும், அவருடைய நடிப்பும் ரசிகர்கள் மத்தியில் ரசிக்க வைக்கிறது.

அதோடு இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே பாக்ஸ் ஆபீஸில் இடம்பெறும். இவருக்கு தமிழகத்தில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளார்கள்.

தளபதி விஜய் அவர்கள் தன்னுடைய சொந்த பெயரிலேயே பல படங்களில் நடித்துள்ளார். அந்த படங்களின் பட்டியல் இதோ!

வெற்றி

Advertisment
Advertisements

'வெற்றி' 1984 ஆம் ஆண்டு எசு. ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்த அதிரடி குற்றவியல் திரைப்படமாகும். விஜயகாந்த் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். சங்கர்-கணேசு இசையமைத்திருந்தனர். எசு. ஏ. சந்திரசேகரின் மகன், விஜய், குழந்தை நட்சத்திரமாக ஒரு சிறிய பாத்திரத்தில் நடித்தார்.

வசந்த ராகம்

எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் 1986ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் 'வசந்த ராகம்' ஆகும். விஜயகாந்த், ரகுமான், சுதா சந்திரன், விஜய குமாரி, செந்தில், கோவை சரளா மற்றும் பலர் இத்திரைப்படத்தில் நடித்திருந்தனர். இப்படத்தில் நடிகர் விஜய் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.

இது எங்கள் நீதி

'இது எங்கள் நீதி' இயக்குனர் எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் விஜய், ராதிகா, ராம்கி நடித்திருக்கும் குடும்பத்திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் நீலகண்டன் மற்றும் ஷோபா சந்திரசேகர் இணைந்து தயாரிக்க, இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார்.

நாளைய தீர்ப்பு

'நாளைய தீர்ப்பு' என்பது 1992ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படம் எசு. ஏ. சந்திரசேகரின் இயக்கத்திலும் சோபா சந்திரசேகரின் திரைக்கதையிலும் விஜயை முதன்மைக் கதைமாந்தராகக் கொண்டு வெளிவந்துள்ளது.

செந்தூரபாண்டி

'செந்தூரபாண்டி' திரைப்படம் விஜய், யுவராணி நடிப்பில் 1993 ல் வெளிவந்த திரைப்படம் ஆகும். இப்படத்தில் விஜயகாந்த், கவுதமி கெளரவ வேடத்தில் நடித்தனர். மனோரமா உள்ளிட்ட மற்றும் பலர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் 1993 திசம்பர் 10 வெளியிடப்பட்டு, வணிக ரீதியாக வெற்றி பெற்றது.

ரசிகன்

'ரசிகன்' 1994 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். விஜய் நடித்த இப்படத்தை எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கினார். இப்படம் சில திரையரங்களில் 175 நாட்கள் ஓடியது. வணிக ரீதியாக வெற்றி பெற்றது. இப்படத்தில் சில காட்சிகள், சாட்சி திரைப்படத்தில் வரும் காட்சிகளை ஒத்து இருந்தது.

வசந்த வாசல்

'வசந்த வாசல்' என்பது 1996 ஆம் ஆண்டு வெளியான தமிழ் அதிரடி காதல் திரைப்படம் ஆகும். எம். ஆர் இயக்கிய இந்த படத்தில் விஜய், சுவதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர், மன்சூர் அலி கான், வடிவேலு, கோவை சரளா ஆகியோர் துணை வேடங்களில் நடித்தனர். இசை அமைப்பாளர் மாசாவின் அறிமுக படம் இது.

ஒன்ஸ்மோர்

'ஒன்ஸ்மோர்' 1997 ஆம் ஆண்டு சூலை மாதம் 4 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், விஜய், சரோஜாதேவி, சிம்ரன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

நேருக்கு நேர்

'நேருக்கு நேர்' 1997 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். வசந்த் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சூர்யா, விஜய், சிம்ரன், கௌசல்யா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

என்றென்றும் காதல்

'என்றென்றும் காதல்' 1999 ஆம் ஆண்டு தமிழில் வெளியான காதல் திரைப்படம். விஜய், ரம்பா, ரகுவரன், பானுப்ரியா மற்றும் எம். என். நம்பியார்ஆகியோர் நடித்துள்ளனர். கதை, திரைக்கதை எழுதி, இசையமைத்து, இயக்கியவர் மனோஜ் பட்னாகர். இவர் கே.டி.குஞ்சுமோன் உடன் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளார்.

ப்ரியமானவளே

'ப்ரியமானவளே' 2000 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 26 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். விஜய் நடித்த இப்படத்தை கே. செல்வபாரதி இயக்கினார். திரையரங்குகளில் படம் அதிகநாட்கள் திரையிடப்பட்டு வெற்றிப்படமாகத் திகழ்ந்தது. எசு.ஏ.ராஜ்குமார் படத்திற்கு இசையமைத்திருந்தார்.

தெறி

'தெறி' 2016 ஆம் ஆண்டில் வெளிவந்த ஓர் தமிழ்த் திரைப்படம் ஆகும். இதில் விஜய், ஏமி ஜாக்சன், சமந்தா, ராதிகா சரத்குமார், பிரபு முதலியோர் நடித்துள்ளனர். அட்லீ இயக்கிய இத்திரைப்படத்தை கலைப்புலி எசு. தாணு தயாரித்தார்.

வாரிசு

'வாரிசு' என்பது 2023 இல் தில் ராஜு தயாரிப்பில் இயக்குநர் வம்சி பைடிபைலி எழுதி இயக்கிய தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தில் விஜய் மற்றும் ராஷ்மிகா மந்தண்ணா ஆகியோர் முக்கிய கதைப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் 2023 ஜனவரி 11 அன்று வெளியிடப்பட்டது.

இந்த படங்களிலெல்லாம் நடிகர் விஜய் 'விஜய்' என்ற பெயருள்ள கதாபாத்திரத்திலேயே நடித்திருக்கிறார். 

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: