டிஸ்யூம், வேட்டைக்காரன், காதலில் விழுந்தேன் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து பிரபலமானவர் விஜய் ஆண்டனி. தொடர்ந்து பிச்சைக்காரன், காளி, நான் உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்தார். இவர் சென்னை டி.டி.கே சாலையில் உள்ள வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு 16 வயதில் மீரா என்ற மகள் உள்ளார். இவர் சென்னை சர்ச் பார்க் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் மீரா இன்று (செப்.19) அதிகாலை வீட்டில் உள்ள தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மீராவின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில்மீரா மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது. இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை எப்போதும் ஒரு தீர்வு இல்லை. மன அழுத்தத்திற்கு 104 என்ற எண்ணை அழைத்து இலவச ஆலோசனை பெறலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“