சர்கார் : தளபதி 62 பெயர் அறிவிப்பு- வைரல் ஆகும் ஃபர்ஸ்ட் லுக்

Vijay 62 First Look : நடிகர் விஜய் பிறந்தநாள் நாளை அனைத்து ரசிகர்களாலும் கொண்டாடப்படுகிறது. இதற்காக இன்று ரசிகர்களுக்கு சர்பிரைஸ் காத்திருக்கிறது

Actor Vijay Political Speech In Sarkar Audio Launch, விஜய், நடிகர் விஜய் அரசியல், சர்க்கார் விழாவில் விஜய் அரசியல் பேச்சு, தலித் அரசியல்
Actor Vijay Political Speech In Sarkar Audio Launch, விஜய், நடிகர் விஜய் அரசியல், சர்க்கார் விழாவில் விஜய் அரசியல் பேச்சு, தலித் அரசியல்

நடிகர் விஜய் என்ற ஒற்றைப் பெயர் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களைக் கட்டிப்போட்டு வைத்துள்ளது. ரசிகர்களால் தளபதி எனத் தூக்கி வைத்துக் கொண்டாடும் விஜய் பிறந்தநாள் ஒவ்வொரு வருடமும் திருவிழா போலக் காட்சியளிக்கும். தமிழகம் முழுவதும் பேனர்கள், போஸ்டர்கள் எனப் பல ஏற்பாடுகளை ரசிகள் செய்வது வழக்கம். அதிலும், எல்லா ஆண்டும் மக்களுக்கான நலத்திட்டத்தைச் செயல்படுத்துவதை ரசிகர்கள் கடமையாக கொண்டுள்ளனர். இப்படி எல்லா ஆண்டும் சிறப்பாக கொண்டாடி விஜய்க்கு சர்பிரைஸ் கொடுக்கும் ரசிகர்களுக்கு இந்த ஆண்டு புதிதாக விஜய் சர்பிரைஸ் கொடுக்கிறார். என்ன அது?

Vijay 62 First Look: விஜய் 62 படத்தின் புதிய சர்பிரைஸ்… ரசிகர்கள் உற்சாகம்!!!

6:20 PM: தளபதி 62 படத்தின் பெயர் சர்க்கார் என்று அறிவித்து, ஃபர்ஸ்ட் லுக் படத்தையும் வெளியிட்டது சன் பிக்சர்ஸ். அதன் ட்விட்டர் பக்கத்தில் இந்த அறிவிப்பை 15 நிமிடங்களில் 8,700 பேர் ரீ- ட்வீட் செய்திருக்கிறார்கள். 14,000 பேர் லைக் செய்திருக்கிறார்கள். 900 பேர் ரிப்ளை செய்திருக்கிறார்கள்.

6:05 PM: மாலை 6 மணிக்கு தளபதி 62 படத்தின் பெயர் சர்க்கார் என்று அறிவித்த சன் பிக்சர்ஸ், ஃபர்ஸ்ட் லுக் படத்தையும் வெளியிட்டது.

5:50 PM: இன்னும் 10 நிமிடங்களில் தளபதி 62 ஃபர்ஸ்ட் லுக் வெளியிடுவதாக சன் பிக்சர்ஸ் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.

முன்னர் தயாரான செய்தி:

நடிகர் விஜய் நடிப்பில், எ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘விஜய் 62’ படத்தின் பெயர், கதை மற்றும் லுக் என அனைத்தும் இவ்வளவு நாள் மர்மமாகவே உள்ளது. படத்தின் பிரமோஷனிற்காக எந்தத் தகவலையும் அப்படக் குழு வெளியிடவில்லை. ஆனால் விஜய் பிறந்தநாளன்று படம் குறித்த முக்கிய தகவல் வெளியே வரும் எனக் கூறியிருந்தனர்.

இந்நிலையில், ‘விஜய் 62’ படத்தின் ஃபர்ஸ்டு நாளை வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பைப் படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த ஃபர்ஸ்டு லுக் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது.

முன்னதாக விஜய் நடித்த கத்தி, துப்பாக்கி ஆகிய படங்களை இயக்கியவர் முருகதாஸ். தற்போது 3வது முறையாக மீண்டும் ஜோடி போட்டுள்ளனர் இவர்கள் இருவரும். விஜய் 62 படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், கருப்பையா, ராதாரவி எனப் பலரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

விஜய் 62 படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் நிறைவடைந்துள்ள நிலையில், ஃபர்ஸ்டு லுக் போஸ்டர் நாளை வெளியாகும் என்ற அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது வரை போஸ்டர் எப்படி இருக்கும் எனத் தெரியாத நிலையில் இது ஒரு சர்பிரைஸாக அமையும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Actor vijay birthday huge surprise awaits for fans

Next Story
சூப்பர் ஸ்டார் ரஜினி தங்கியிருந்த வில்லாவிற்கு இப்படி ஒரு பெயரா?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com