தளபதி விஜய் சென்னையில் புதிய வீடு வாங்கிய தகவல் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இந்த வீடு எத்தனை கோடி என்பது தொடர்பான கேள்விகளும் எழுந்து வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார். நாளைய தீர்ப்பு என்ற படம் தொடங்கி காதல் ஆக்ஷன் செண்டிமெண்ட் என பல ஜானர்களில் வெற்றிப்படங்களை கொடுத்துள்ள விஜய்க்கு தமிழகம் மட்டுமல்லாது இந்திய அளவில் பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது.
தளபதி விஜய்யின் வீடு, சென்னையில் கோடிக்கணக்கில் வாங்கப்பட்ட வீடு தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் தனக்கென தனி இடத்தை பிடித்துக் கொண்டிருக்கும் நடிகர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான அனைத்து படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளது. இவருக்கு தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.
இவரது நடிப்பில் கடந்த தமிழ் புத்தாண்டு அன்று வெளியான பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், வசூலில் சாதனை படைத்தது. இந்த படத்தை தொடர்ந்து பிரபல தெலுங்கு இயக்குனரான வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். ஒரே நேரத்தில் தமிழ் தெலுங்கில் தயாராகி வரும் இந்த படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், தளபதி விஜய் தற்போது சென்னையில் புதிய வீடு வாங்கியுள்ளார் என்ற செய்தி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே சென்னை நீலாங்கரையில் உள்ள மிகப்பெரிய வீட்டில் விஜய் தனது குடும்பத்துடன் வசித்து வருவது அனைவரும் அறிந்த ஒன்று. இதுதவிர விஜய்க்கு அடையாறில் பெரிய அலுவலகம் உள்ளது.
இதனிடையே தற்போது விஜய் சென்னையில் இதுவரை இல்லாத விலையில் அடுக்குமாடி குடியிருப்பில் பிளாட் வாங்கியுள்ளார் விஜய். இதன் விலை 35 கோடி என்றும், தற்போது இந்த பிளாட்டை விஜய் தனது அலுவலகமாக பயன்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் அதே வளாகத்தில் அதே விலையில் , நடிகர் ஆர்யா பிளாட் வாங்கியதாக கூறப்படுகிறது.
இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“