அண்ணன் ஜேசன் நடிப்பில் பட்டையை கிளப்புகிறார்... மகள் சாஷா பாட்மிட்டனில் விளாசி எடுக்கிறார்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
actor vijay daughter divya sasha, விஜய் மகள்

actor vijay daughter divya sasha, விஜய் மகள்

சென்னையில் உள்ள அமெரிக்க பள்ளியில் படித்து வரும் தளபதி விஜய் மகள் திவ்யா சாஷா பள்ளியின் பாட்மிட்டன் குழுவில் விளையாடி வருகிறார்.

Advertisment

தமிழ் சினிமாவில் உயர்ந்த அந்தஸ்தில் இருக்கும் பிரபல நடிகர்களில் கொடிக்கட்டி பறப்பவர் தளபதி விஜய். விஜய்க்கும் சங்கீதாவுக்கும் ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார். இவர்கள் இருவரும் அவர்களுக்கென தனித் திறமைகளை கொண்டவர்கள். மகன் ஜேசன் சஞ்சய் அப்பாவை போலவே நடிப்பில் களமிறங்கியிருக்கிறார். மகள் சாஷா பாட்மிட்டன் விளையாட்டில் ஒரு கலக்கு கலக்கி வருகிறார்.

விஜய் மகள் திவ்யா சாஷா

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் உருவாகிவரும் தளபதி 63 படத்தில் தற்போது பிஸியாக இருக்கிறார். சமீபத்தில் தளபதியின் மகன் ஜேசன் சஞ்சய் குறும்படம் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளராய் தோன்றி அசத்தினார்.

Advertisment
Advertisements

அண்ணன் சஞ்சயை தொடர்ந்து தற்போது தங்கை சாஷாவும் பெருமை சேர்த்துள்ளார். இந்நிலையில் தளபதி விஜய்யின் மகள் திவ்யா சாஷா விளையாட்டில் சாதனை படைத்துள்ளார். சாஷா படிப்பை தாண்டி பேட்மிண்டன் விளையாட்டில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

இப்போது அவர் இடம்பெற்ற பேட்மிண்டன் குழு சமீபத்தில் நடந்த ஒரு விளையாட்டு போட்டியில் 3வது இடம் பிடித்துள்ளதாம். இந்த தகவலை அவரின் பள்ளி நிர்வாகமே முகநூல் பக்கத்தில் பதிவு செய்துள்ளனர்.

Actor Vijay

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: