அசுர வளர்ச்சியில் விஜய் தேவரகொண்டா... அப்போது 500 ரூபாய் கூட இல்லை ஆனால் இப்போது?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
விஜய் தேவரகொண்டா ஜெராக்ஸ், உண்மை இல்லை - ஸ்ரீ  ரெட்டி

vijay devarakonda, விஜய் தேவரகொண்டா,shri reddy

போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள 30 வயதிற்குள் சாதித்த இந்தியர்களின் பட்டியலில் திரையுலகில் இருந்து விஜய் தேவரகொண்டா இடம்பெற்றுள்ளார்.

Advertisment

போர்ப்ஸ் பத்திரிக்கை ஆண்டு தோறும் பல்வேறுப் பிரிவுகளின் கிழ் சாதனையாளர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. போர்ப்ஸ் பத்திரிக்கையின் இந்தியப் பிரிவான போர்ப்ஸ் இந்தியா இப்போது 30 வயதிற்குள் சாதித்த இந்திய சாதனையாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

போர்ப்ஸ் அண்டர் 30 பட்டியலில் விஜய் தேவரகொண்டா

இதற்காகத் தொழில்துறை, உற்பத்தி மற்றும் ஆற்றல், விளம்பரத் துறை, வர்த்தகம், ஊடகம், விவசாயம் உள்ளிட்ட 16 துறைகளில் இருந்து சாதனை மனிதர்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இதற்காக 300 நபர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன. அவற்றில் இருந்து நிபுணர்களின் உதவியோடு 175 பெயர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. அவற்றில் இருந்து 30 பேர் இறுதி செய்யப்பட்டதாக ஃபோர்ப்ஸ் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த 30 பேர் கொண்ட இறுதிப்பட்டியலில் ஒரேயொரு இந்திய நடிகர் மட்டுமே இடம்பெற்றுள்ளார். ‘அர்ஜூன் ரெட்டி’ படத்தின் மூலம் பிரபலமான நடிகர் விஜய் தேவரகொண்டா மட்டுமே திரைத்துறையில் இருந்து இந்தப் பட்டியலுக்குத் தேர்வாகி உள்ளார்.

Advertisment
Advertisements

இது பற்றி அவர் தெரிவிக்கும்போது, “4 வருடங்களுக்கு முன்பு ஆந்திரா வங்கியில் 500 ருபாய் இல்லாததால் கணக்கை முடக்கிவிட்டனர். இன்று போர்ப்ஸ் அண்டர் 30ல் இடம் பிடித்துள்ளேன். மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று கூறியுள்ளார்.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: