Advertisment

சமந்தா ரசிகன்.. இவர்கள் சிறந்த இயக்குனர்கள்: விஜய் தேவரகொண்டா ஓபன் டாக்

சமந்தாவின் ரசிகன் நான். அவர் நடித்த படங்களை பார்த்துள்ளேன்- விஜய் தேவரகொண்டா

author-image
WebDesk
New Update
Actor Vijay Deverakonda

Actor Vijay Deverakonda

இயக்குநர் சிவா நிர்வனா (Shiva Nirvana) இயக்கத்தில் நடிகர் விஜய் தேவர்கொண்டா, சமந்தா உள்பட முரளி சர்மா, சச்சின் கதேர், சரண்யா பொன்வண்ணன், லட்சுமி என ஏராளமானோர் நடித்துள்ள திரைப்படம் குஷி. இப்படம் செப்டம்பர் 1-ம் தேதி தெலுங்கு, தமிழ், கன்னடம், ஹிந்து உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது.

Advertisment

இந்நிலையில் படத்திற்கான ப்ரோமோசன் பணிகளில் திரைப்பட குழுவினர் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக படத்தின் நடிகர் விஜய் தேவரகொண்டா கோவையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "செப்டம்பர் 1-ம் தேதி குஷி படம் திரையரங்குகளில் வெளியாகிறது. காதல் கதை சார்ந்த பொழுதுபோக்கு படமாக இப்படம் உருவாகி உள்ளது. அனைவரும் திரையரங்குகளுக்கு சென்று பாருங்கள். தமிழ், தெலுங்கு படங்களைப் பொருத்தவரை பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை.

தமிழில் விஜய் நடித்த குஷி படமும், தெலுங்கில் பவன் கல்யாண் நடித்த குஷி படமும் மிகப்பெரிய பிளாக்பஸ்டர்ராக அமைந்தது. சமந்தாவின் ரசிகன் நான். அவர் நடித்த நீ தானே என் பொன்வசந்தம் போன்ற படங்களைப் பார்த்துள்ளேன் என்றார்.

தொடர்ந்து, பாகுபலி, புஷ்பா, கே.ஜி.எப் போன்ற படங்கள் மிகப்பெரிய படங்கள். குஷி குடும்பங்களுடன் வந்து பார்க்க கூடிய படமாக இருக்கும். தமிழ் மக்கள் குஷி படத்தின் பாடல்களை ரசிப்பார்கள். ஸ்கிரிப்ட் இருந்தால் நிச்சயம் அடுத்த முறை சமந்தாவுடன் நடிக்க தயாராக உள்ளேன் என்றார். மாவீரன் படம் நேற்று பார்த்தேன். படம் எனக்கு மிகவும் பிடித்தது. சிவ கார்த்திகேயன் சிறப்பாக நடித்துள்ளார். தமிழில் லோகேஷ், நெல்சன், வெற்றிமாறன் ஆகியோர் சிறந்த இயக்குநர்கள். வெற்றி மாறன் எனக்கு மிகவும் பிடிக்கும். அவரின் அனைத்து படங்களும் எனக்கு பிடிக்கும்.

publive-image

காலா, கபாலி போன்ற படங்களின் கேமரா மேன் முரளி இந்த படத்திலும் எங்களுடன் இணைந்துள்ளார். ஜெயிலர் படம் இன்னும் பார்க்கவில்லை, ஆனால் படத்தின் ரிவ்யூ நன்றாக உள்ளது எனவும், ஜெயிலர் படம் அதிகமான வசூல் கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

தற்போது வரக்கூடிய படங்கள் வெளிநாடுகளில் பயணிக்காமல் இங்கேயே காஷ்மீரில் படமாக்குவது - படக்காட்சிகளுக்கு ஏதுவாக அமைகிறது. காஷ்மீர் மக்கள் நன்கு பழகக் கூடியவர்கள், படக்காட்சிகளை எடுப்பதற்கு அனைத்து பாதுகாப்பும் அனைத்து வசதிகளும் காஷ்மீரில் உள்ளது என தெரிவித்தார்.

அனைத்து மொழி படங்களிலும் படம் சார்ந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் வாய்ப்புகள் கிடைக்கிறது. குஷி படத்தின் இசையமைப்பாளர் கேரளாவை சேர்ந்தவர் மற்ற கலைஞர்கள் பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள். முக்கியமாக சினிமா துறையில் திறமை என்பது அவசியமானது. திறமையின் மூலம்தான் சினிமா துறை பயணிக்கிறது. அந்த பார்வையில் தான் நான் இத்துறையை பார்க்கிறேன்" என்றார்.

செய்தி: பி.ரஹ்மான்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Cinema Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment