கோலமாவு கோகிலா, டாக்டர் படத்தை இயக்கி பிரபலமான நெல்சன் திலீப்குமார் அடுத்து விஜய் நடிப்பில் பீஸ்ட் படத்தை இயக்குகிறார். விஜய் மற்றும் நெல்சனின் வைரலான, படத்துடன் படப்பிடிப்பு முடிந்ததாக சமீபத்தில் தயாரிப்புக்குழு அறிவித்தது.
படத்தின் டப்பிங் பணிகளும் சமீபத்தில் முடிந்தன. சுவாரஸ்யமாக, ‘பீஸ்ட்’ படத்தில் விஜய் சில உருது வார்த்தைகளை பேசுவார் என்று ஷைன் டாம் சாக்கோ ஒரு ஆன்லைன் சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். இவர் படத்தில் வில்லன்களில் ஒருவராக வருகிறார்.
துப்பாக்கி படத்தில் ஹிந்தியிலும், தெறியில் மலையாளத்திலும் பேசி அசத்திய விஜய், இம்முறை ‘பீஸ்ட்’ படத்தில் புதிய மொழி ஒன்றை முயற்சித்துள்ளார். இந்த டயலாக் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ஒன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பீஸ்ட் படம் காதல் மற்றும் நகைச்சுவை நிறைந்த ஒரு ஆக்ஷன் த்ரில்லர் என்று கூறப்படுகிறது, இப்படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன் மற்றும் அபர்ணா தாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
தளபதி விஜய் சமீபத்தில் இந்த ஆண்டின் ட்விட்டர் டிரெண்டிங்கில் முதலிடத்தைப் பிடித்ததன் மூலம், சமூக ஊடகத்தில் புயலை கிளப்பினார். ரசிகர்கள் இந்த சிறப்பு தருணத்தை ஹேஷ்டேக்குகளுடன் கொண்டாடினர்.
அதேபோல போனிகபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் அஜீத் நடித்துள்ள வலிமை படம் இந்த பொங்கலுக்கு வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். அதன் டிரெய்லர் யூடியூபில் வெளியாகி பயங்கர வைரலாகியது.
ஆனால், கொரோனா பரவலால் வலிமை வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது.
வலிமை மற்றும் பீஸ்ட் இரு படங்களுமே, பல்வேறு இந்திய மொழிகளில் தயாராகி உள்ளது. அதில், விஜய் தமிழ் மட்டுமல்லாது, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பிற மொழிகளிலும் டப் செய்திருக்கிறார்.
இதை விஜய்யின் ரசிகர்கள் அஜித்துடன் ஒப்பிட்டு கொண்டாடி வருகின்றனர்.
அஜித் எவ்வளவு முயன்றும் அவரது படங்களுக்கு பிற மொழிகளில் டப்பிங் பேச முடியவில்லை. ஆனால், விஜய் சர்வ சாதரணமாக தன்னுடைய படங்களுக்கு பிற மொழிகளில் அவரே சொந்த குரலில் டப்பிங் செய்திருப்பதை சோஷியல் மீடியாவில் விஜயின் ரசிகர்கள் சிலாகித்து வருகின்றனர்.
சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள பீஸ்ட் படம், 2022 கோடையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது, ‘பீஸ்ட்’ படத்தின் முதல் சிங்கிளை ரசிகர்கள் எதிர்பாத்து காத்திருக்கின்றனர்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சூர்யா நடிக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ பிப்ரவரி 5 ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“