தளபதி ரசிகர்களை எல்லோரும் குஷியில் குத்தாட்டம் போட வைக்க ஒரு சூப்பர் செய்தி... நடிகர் விஜய் ஐரா விருது பெற்றது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இயக்குநர் அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் மெர்சல். இந்தப் படத்தில் தளபதி விஜய் 3 கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். அவருடன் நடிகர் வடிவேலு, சமந்தா, நித்யா மேனன், எஸ்.ஜே.சூரியா ஆகியோரும் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்தப் படத்தில் இடம்பெற்ற ஆளப்போறான் தமிழன் பாடல் பட்டி தொட்டி எங்கும் பரவி ஹிட் அடித்தது.
நடிகர் விஜய் பெற்ற சர்வதேச விருது
கடந்த செம்டம்பர் மாதம் இந்தப் படத்தில் நடித்ததற்காக விஜய் ஐரா விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து சிறந்த சர்வதேச நடிகருக்கான ஐரா என்ற சர்வதேச விருதை மெர்சல் படத்தில் நடித்ததற்காக விஜய் பெற்றுள்ளார்.
நடிகர் விஜய், ஸ்டார் வார்ஸ் படத்தில் நடித்த ஜான் போயிகா, கெட் அவுட் படத்தில் நடித்த டேனியேல் கலுயா, ஜாமி லோமஸ் படத்தில் நடித்த கிரிஸ் அட்டோ ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டது. இணையத்தில் நடந்த ஓட்டெடுப்பின்படி சிறந்த நடிகராக விஜய் தேர்வு செய்யப்பட்டார்.
இதற்கான விருது வழங்கும் விழா விரிட்டனில் நடந்தது. நடிகர் விஜய் நேரில் சென்று விருதைப் பெற்றுக்கொண்டார். தற்போது அதற்கான புகைப்படங்களை விருது வழங்கிய ஐரா (IARA) அமைப்பு தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
IARA BEST INTERNATIONAL ACTOR 2018
Vijay Joseph is a multi talented actor and playback singer. He is referred to by the media as Thalapathy (commander). #IARA #IARA2018 #IARAAWARDS #IARAAWARDS2018 #iarabestinternationalactor#Vijay #actorvijay #vijayjoseph #thalapathy pic.twitter.com/BcL2EmWPM4
— IARA AWARDS (@IARA_Awards) 12 December 2018
முன்னதாக ட்விட்டர் இந்தியா 2018ம் ஆண்டில் அதிகமாக டிரெண்டில் வந்த முதல் 10 பேரின் பட்டியலை வெளியிட்டது. அதில், விஜய் இடம்பெற்றிருந்தார். மோடி, ஷாரூக் கான் உள்ளிட்ட பலரும் இடம்பெற்றிருந்த அந்த பட்டியலில் இருந்த ஒரே தமிழன் இவர். தற்போது சர்வதேச விருதிலும் இடம்பெற்றிருந்த ஒரே தமிழகனாக மட்டுமில்லாமல், விருதை வென்று அதனை நேரடியாக லண்டனுக்கே சென்று வாங்கியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.