Advertisment

புதிய அப்டேட் கொடுத்த கோட் படக்குழு: ரசிகர்கள் ஹேப்பி

விஜய் நடித்து வரும் கோட் படம் குறித்து படக்குழு முக்கிய அறிவிப்பு ஒன்றை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
 Goat Movie Poster

தளபதி விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கி வரும் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் படம் ஐமேக்ஸில் வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பினை பெற்று வருகிறது.

Advertisment

தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் முக்கியமானவர் விஜய். தற்போது அரசியல்வாதியாக புதிய அவதாரம் எடுத்துள்ள இவர், கைவசம் உள்ள படங்களை முடித்துவிட்டு முழு நேர அரசியலில் கவனம் செலுத்த உள்ளதாக அறிவித்துள்ளார். இதனால் இவர் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படங்கள் குறித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், ஒவ்வொரு அப்டேட்டும் கவனம் பெற்று வருகிறது.

அந்த வகையில் லியோ படத்திற்கு பின் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் என்ற படத்தில் நடித்து வருகிறார். பிரபுதேவா, பிராஷாந்த், அஜ்மல், மைக் மோகன், மீனாட்சி, சினேகா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், வரும் செப்டம்பர் 5-ந் தேதி படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே அவ்வப்போது பாடல்கள் மற்றும் புதிய அப்டேட்களை படக்குழு வெளியிட்டு வருகிறது. இதில் இதுவரை 3 பாடல்கள் வெளியாகியுள்ள நிலையில், இந்த 3 பாடல்களுமே ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க தவறிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். ஆனாலும், சமீபத்தில் வெளியிடப்பட்ட படத்தின் டீசர் வரவேற்பை பெற்ற நிலையில், கடந்த வாரம் வெளியான 3-வது பாடலில், டிஐஜி செய்த விஜயின் வீடியோ கடுமையான விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

இந்நிலையில், தற்போது படக்குழு மேலும் ஒரு முக்கிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. அதன்படி வரும் செப்டம்பர் 5-ந் தேதி பிரம்மாண்டாக வெளியாக உள்ள தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் படம் ஐமேக்ஸ் திரையில் வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது, மேலும் ஐமேக்ஸ் தங்களது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்திலும் இது குறித்து பதிவிட்டுள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
IMAX
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment